[X] Close

'இந்தியாவுக்கு வாங்க, உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்': அப்ரிடிக்கு கம்பீர் பதிலடி


  • kamadenu
  • Posted: 04 May, 2019 13:51 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

கம்பீருக்கு ஒரு சாதனையும் இல்லை, திமிர் பிடித்தவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக, உளவியல் மருத்துவரிடம் தனிப்பட்ட முறையில் அழைத்துச் செல்கிறேன். இந்தியா வாருங்கள் என்று அப்ரிடிக்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து 'தி கேம்சேஞ்சர்' எனும் புத்தகம் எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது டெல்லி கிழக்குப்பகுதி பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர் குறித்து கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

''கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சினை இருக்கிறது. எந்தவிதமான ஆளுமைத் திறனும் கம்பீருக்கு கிடையாது. கிரிக்கெட்டில் ஒரு சாதாரண வீரர், எந்தவிதமான ரெக்கார்டும், குறிப்பிட்ட சாதனையும் அவருக்குக் கிடையாது. ஆனால், ஏராளமான திமிருடன் நடந்து கொள்வார்.

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் கலவையில் உருவாகியவன் என்ற நினைப்போடுதான் கம்பீரின் செயல்பாடு இருக்கும். கராச்சியில் நாங்கள் இருவரும் ஒருவொருக்கு ஒருவர் மோதிக்கொண்டோம்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியின்போது, கம்பீர் ஒரு ரன் எடுத்து முடித்துவிட்டு, 2-வது ரன்னுக்கு என்னை நோக்கி வேகமாக ஓடி வருகிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டோம்'' என்று அப்ரிடி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து பாஜக வேட்பாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், " ஷாகித் அப்ரிடி. நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர். எப்படியாகினும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள இந்திய அரசு விசாவை இன்னும் வழங்குகிறது. இந்தியாவுக்கு வாருங்கள், தனிப்பட்ட முறையில் நான் உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close