[X] Close

பிளே-ஆப் சுற்றை குறிவைக்கும் ஹைதராபாத்: பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 04 May, 2019 08:01 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் அணி, 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியுடனான இந்தஆட்டத்தில் ஹைதாராபாத் வெற்றிபெற்றால் அந்த அணி பிளே-ஆப்சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

எனவே இன்றைய ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.

ஒரு வேளை இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் தோற்றாலும் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கும்.

கொல்கத்தாவுக்கும், பஞ்சாபுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்த ஆட்டங்களில் இரண்டு அணிகளும் தலா ஒருஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று ஒரு ஆட்டத்தில் தோற்றால் பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்போது நிகர ரன் விகித அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் அணி தகுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இருந்தபோதும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் ஹைதராபாத் அணி முனைப்பு காட்டும்.

ஹைதராபாத் அணி பேட்டிங்கில் விருத்திமான் சஹா, மார்ட்டின் குப்டில், மணீஷ் பாண்டே, கேப்டன் கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், முகமது நபி என பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கடந்த ஆட்டத்தில் மணீஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 71 ரன்களைக் குவித்தார். அதேபோல பவுலிங்கில் புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, முகமது நபி, ரஷித் கான், பாசில் தம்பி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

ஆனால் பெங்களூரு அணியோ இந்த சீசனில், போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு எந்தப் பயனும் இல்லை. அந்த அணிக்கு இது சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். இருந்தபோதும் உள்ளூரில் விளையாடுவதால் அந்த அணி உற்சாகத்துடன் களமிறங்கும்.

இடம்: பெங்களூரு,

நேரம்: இரவு 8

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close