[X] Close

புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்கும் முனைப்பில் டெல்லி கேபிடல்ஸ்: ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்


2

  • kamadenu
  • Posted: 04 May, 2019 08:03 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறஉள்ளது. ஏற்கெனவே பிளே-ஆப்சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற்றுவிட்டது. இந்த கடைசி லீக் ஆட்டத்திலும் டெல்லி அணி வெற்றி பெற்றால், புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 2-வது இடத்துக்கு முன்னேறி விடும்.

எனவே இந்த போட்டியிலும் வெற்றி பெறும் உத்வேகத்துடன் டெல்லி அணி களமிறங்குகிறது. புள்ளிகள் பட்டியலில் ஒன்று முதல் 2 இடங்களுக்கு வந்துவிட்டால், பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், 2-வது வாய்ப்பு இருப்பதால் அந்த இடத்தைப் பெறுவதற்கு டெல்லி அணி முனைப்பு காட்டுகிறது.

பிருத்வி ஷா. ஷிகர் தவண், ரிஷப்பந்த், ஷிரேயஸ் ஐயர், காலின் இங்ரம் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.

அதே நேரத்தில் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த ரபாடா, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக தென் ஆப்பிரிக்கா திரும்புகிறார். இருப்பினும், இஷாந்த் சர்மா,கிறிஸ் மோரிஸ், அக்சர் பட்டேல்,அமித் மிஸ்ரா உள்ளிட்டோரின் துணையுடன் டெல்லி அணி களம்இறங்கவுள்ளது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா திரும்புகிறார். இதையடுத்து ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். ஸ்மித்துக்குப் பதிலாக ஆஷ்டன் டர்னர் களமிறங்குவார்.

ராஜஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் ரஹானே, டர்னர், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டோன், ரியான் பராக்கும் பவுலிங்கில் வருண் ஆரோன், ஒஷான் தாமஸ், ஷிரேயாஸ் கோபால், ஜெயதேவ் உனத்கட், ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.

கடைசி லீக் போட்டியில் வெற்றி கண்டாலும், ராஜஸ்தான் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு மிகவும் குறைவாகவுள்ளது. தற்போது அந்த அணி 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் பட்டியலில் 13 புள்ளிகளுடன் இருக்கும். ஆனாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தாக வேண்டிய நிலை வந்தால் ராஜஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போதுதான் ராஜஸ்தானும், ஹைதராபாத்தும் சம புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்படியிருக்கும் நிலையில் நிகர ரன் விகித அடிப்படையில் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும். எஞ்சியுள்ள போட்டிகளில் மற்ற அணிகளின் வெற்றி-தோல்வியைப் பொருத்தே ராஜஸ்தானின் பிளே-ஆப் வாய்ப்பு உள்ளது.

அணிகள் விவரம்

டெல்லி கேபிடல்ஸ்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, காலின் இங்க்ராம், மன்ஜோத் கர்லா, சேர்பான் ரூதர்போர்டு, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், பண்டாரு ஐயப்பா, ஹர்ஷால் படேல், இஷாந்த் சர்மா, நது சிங், சந்தீப் லமிசான், டிரென்ட் போல்ட், அக்சர் படேல், கிறிஸ் மோரிஸ், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, ஜலஜ் சக்சேனா, கீமோ பால், ராகுல் டிவாட்டியா, அங்குஷ் பெயின்ஸ்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், ஆஷ்டன் டர்னர், இஷ் சோதி, ஓஷன் தாமஸ், லயிம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன், சுபம் ரஞ்ஜனே, ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், சுதேஷன் மிதுன், ஜெயதேவ் உனத்கட், பிரசாந்த் சோப்ரா, மகிபால் லாம்ரோர், ஆர்யமான் பிர்லா, ரியான் பராக், தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம், வருண் ஆரோன், சஷாங் சிங், மனன் வோரா, ராகுல் திரிபாதி.

இடம்: டெல்லி

நேரம்: மாலை 4

நேரலை:

 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close