[X] Close

எந்த ஒரு தனி வீரரையும் நம்பி அணி இல்லை- மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி


  • kamadenu
  • Posted: 04 May, 2019 08:00 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஐபிஎல் டி20 கிரிக் கெட்லீக் தொட ரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதி ரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கண்டது.

வெற்றிக்குப் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, "எந்த ஒரு தனி வீரரையும் நம்பி மும்பை இந்தியன்ஸ் அணி இல்லை" என்றார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் 'டை'யில் முடிவடைந்தது.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 4 பந்துகளில் 2 விக்கெட் களை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரில் 2 விக்கெட்களை இழந்தால் அந்த அணி, சூப்பர் ஓவரில் எஞ்சியுள்ள பந்துகளை விளையாட முடியாது. எனவே 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் மும்பை விளையாடியது.

ஹர்திக் பாண்டியாவும், கெய்ரன் பொலார்டும் களமிறங்கி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஹர்திக் பாண்டியா முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டியும், இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் என மொத்தம் 7 ரன்க ளும், பொலார்டு 3-வது பந்தில் 2 ரன்களும் சேர்த்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

மும்பை வெற்றி பெற்றதால் அந்த அணி 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டி யலில் மேலும் முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் மும்பை 2-வது இடத்தில் உள்ளது.

வெற்றிக்குப் பின்னர் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. 2017 ஐபிஎல் போட்டியில் நாங்கள் கோப்பையை வென்றோம். 2 லீக் போட்டிகள் மீதமிருந்த நிலையிலேயே நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றோம். ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் ஓர் அணியாக ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி கண்டோம். எந்த ஒரு தனி வீரரையும் நம்பி நாங்கள் களமிறங்கவில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தார்போல் எங்களை மாற்றிக் கொண்டு விளையாடி வருகிறோம்.

தனி நபரின் சாதனைகளை நாங்கள் நம்புவது இல்லை. அனைத்து வீரர்களும் தங்களது திறமையை அணிக்காக களமிறக்கவேண்டும்.

இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் 14 அல்லது 15-வது ஓவர்களில் களமிறங்க வேண்டி வந்தது. இருந்தபோதும் அவர் கணிசமான ரன்களைக் குவித்துள்ளார். அதைப் போலவே சில போட்டிகளில் கெய்ரன் பொலார்டும் அபாரமாக ஆடினார். அவர்கள் இருவரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கி விளையாடக் கூடிய திறமை படைத்தவர்கள். இதனால் எங்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close