[X] Close

'நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'- தென் ஆப்பிரிக்கா புறப்படும் ரபாடா வருத்தம்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 13:21 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

முதுகு வலியால் அவதிப்பட்டுவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறார்.

உலகக் கோப்பைப் போட்டிக்காக போதுமான ஓய்வு, பயிற்சி தேவை என்பதால், அவரை உடனடியாக நாடு திரும்பக் கோரி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ரபாடா இல்லாத நிலையில், ப்ளே-ஆஃப் வரை வந்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரபாடா இதுவரை 12 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை  தக்கவைத்துள்ளார்.

ஆனால், கடந்த மாதம் 28-ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரபாடாவின் முதுகில் வலி ஏற்பட்டது. அதுமுதல் பயிற்சியிலும் ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த புதன்கிழமை நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ரபாடா பங்கேற்கவில்லை.

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ரபாடாவுக்கு மருத்துவச் சோதனை, ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டு, அந்த தகவல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் பகிரப்பட்டது. மே 30-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டு ரபாடாவை உடனடியாக தென் ஆப்பிரிக்க திரும்ப அந்நாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Kagiso-Rabada.jpg 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்திலும், ப்ளே-ஆப் சுற்று ஆட்டங்களிலும் ரபாடா பங்கேற்க மாட்டார்.

இது குறித்து ரபாடா தெரிவித்துள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியை விட்டு நான் செல்வது உண்மையில் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில், நான் சார்ந்திருக்கும் என்நாடு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இந்த சீசன் எனக்கு களத்திலும், ஓய்வரையிலும் மிகச்சிறப்பாக இருந்தது. நம்முடைய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் டேல் ஸ்டெயின், லுங்கி இங்கிடி, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தோள்பட்டை காயத்தால் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close