[X] Close

முக்கிய ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 08:10 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்றுமோதவுள்ளன. இதில் தோல்வியுறும் அணி போட்டியிலிருந்து வெளியேறும் என்பதால் இரு அணிகளுக்குமே முக்கியமான ஆட்டமாக இது அமைந்துள்ளது.

மொஹாலியில் இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுவரை பஞ்சாப், கொல்கத்தா இரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி களுடன் தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இரு அணிகளுமே அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில் நீடிக்க முடியும்.

மாறாக இதில் தோல்வியுறும் அணி போட்டியிலிருந்து வெளி யேறும் நிலை ஏற்படும். எனவே இரு அணிகளுக்குமே இது வாழ் வாசாவா ஆட்டமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் முதல் பாதி வரை இரு அணிகளுமே அதிக வெற்றிகளைக் குவித்தன. அதன்பிறகு கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்தது. அதைப் போலவே பஞ்சாப் அணிக்கும் தோல்வி மேல் தோல்வி கிடைத் தது.

மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா வீரர்கள் சுப்மான் கில், கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் அபாரமாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். எனவே இன்றைய ஆட்டத்திலும் இவர்களது அதிரடி தொடர வாய்ப்புள்ளது.

ரஸ்ஸல் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 207.59 சராசரியில் 486 ரன்கள் குவித்து அணியின் நட்சத்திர வீரராக மாறியுள்ளார். எனவே பஞ்சாப் அணிக்குரஸ்ஸல் மிகப்பெரிய தலைவலியாக இருக்கக் கூடும்.

பவுலிங்கில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரியஅளவில் எடுபடவில்லை. எனவே பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அந்த அணிக்கு வெற்றி கிடைக்கும்.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். பவுலிங்கில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், மொகமது ஷமி, சாம் கர்ரன், முருகன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், ஹர்டஸ் வில்ஜோயன், அங்கித் ராஜ்புத் ஆகியோர் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

அணி விவரம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), சேம் கரன், கிறிஸ்கெயில், மொகமது ஷமி, நிக்கோலஸ் பூரன், மோசஸ் ஹென்ரிக்ஸ், ஹர்டஸ் வில்ஜோயன், தர்ஷன் நல்கண்டே, சர்ப்ராஸ் கான், அர்ஷ்தீப் சிங், அக்னிவேஷ் யாச்சி, ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், ஆன்ட்ரூ டை, லோகேஷ் ராகுல், அங்கித் ராஜ்புத், மன்தீப் சிங், சிம்ரன் சிங், மயங்க் அகர்வால், கருண் நாயர், முஜீப் உர் ரஹ்மான், டேவிட் மில்லர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், நிகில் யாக், ஜோ டென்லி, ஸ்ரீகாந்த் முன்டே, நித்திஷ் ராணா, சந்தீப் வாரியர், பிரஷித் கிருஷ்ணா, லூக்கி பெர்குசன், ஹாரி குர்னே, கே.சி.கரியப்பா, யாரா பிரித்விராஜ்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close