[X] Close

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு


  • kamadenu
  • Posted: 03 May, 2019 08:12 am
  • அ+ அ-

சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி டெல்லி அணியை வீழ்த்தினர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன்தினம் சென் னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதனால் 18 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

44 ரன்கள் குவித்ததோடு, புயல் வேகத் தில் 2 ஸ்டம்பிங்குகளையும் செய்த தோனி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்குப் பின்னர் தோனி கூறும்போது, “போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இதனால் ரன் களைக் குவிக்கச் சிரமப்பட்டோம். ஆனால் 10-வது ஓவருக்குப் பிறகு ரன்களை எடுப்பதில் சிரமம் இல்லை.

15-வது ஓவருக்குப் பிறகு அதிக ரன் களைக் குவித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை குவித்தால் எதிரணியை வீழ்த்துவது சுலபம் என திட்டமிட்டோம். அதன்படி 179 ரன்கள் எடுத்தோம். கடைசி ஓவர்களில் நானும், ராயுடுவும் விளையாடும்போது பந்துகளை அதிகம் எதிர்கொள்ள முடிவு செய்தேன்.

ஏனெனில் நான் களத்துக்கு வந்து 20 பந்துகள் வரை சந்தித்திருந்தேன். ஆனால் ராயுடு அப்போதுதான் வந்திருந்தார். எனவே அவர் பந்துகளை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும் என நினைத்தேன். அந்தத் திட்டத்தின்படி கடைசி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டோம்.

பவுலிங்கின்போது அதிக பனிப்பொழிவு இல்லை என்பதை உணர்ந்தோம். அதேபோல ஹர்பஜன், இம்ரன் தகிர், ஜடேஜா மூவரும் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெறச் செய்தனர். தகிர் மிகவும் அருமையாக பந்துவீசினார்” என்றார்.

ரவீந்திர ஜடேஜா கூறும்போது, “நான் பந்து வீசும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந் தேன். ஆடுகளத்தைக் கணித்து அதற்கு ஏற் றார்போல் பந்துவீசினேன். தகிர் அபாரமாக பந்துவீசினார்” என்றார்.

சுரேஷ் ரெய்னா கூறும்போது, “தோனி அணியில் இருந்தாலே அது அனைவருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். அதுதான் இன்றும் நடந்தது. தோனி போன்ற மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அருகில் இருக்கும் போது அது அணி வீரர்களுக்கு கூடுதல் பலமாகும்” என்றார்.

தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறும்போது, “நாங்கள் ஒரு நேரத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என்ற நிலையில் இருந்தோம். ஆனால் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் எங்களைக் கட்டுப்படுத்தி விட்டனர். எந்த இடத்தில் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து அடுத்த ஆட்டத்தில் அதை சரிசெய்வோம்.

தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் கள் இருக்கும்போது போட்டியில் என்ன வேண் டுமானாலும் நடக்கும். தோனி சந்தித்த முதல் பந்திலிருந்து கடைசி பந்துவரை களத்தில் இருக்கும்போது என்ன வேண்டு மானாலும் நடக் கும். தோனி ஆட் டத்தை மாற்றி விட்டார்” என்றார்.

ரசிகர்களுக்கு பரிசு

ஆட்டத்துக்குப் பின்னர் மைதா னத்தை சுற்றி வலம் வந்த தோனி, ரசிகர்களுக்கு டென்னிஸ் பந்துகளை பரிசாக வழங்கினார். பந்துகளை டென்னிஸ் மட்டையால் கேலரி பக்கம் விளாசி அதை ரசிகர்கள் பெற்றுக்கொள்ளச் செய்தார்.

மைதான ஊழியர்களுடன் புகைப்படம்

பின்னர் சேப்பாக்கம் மைதான ஊழியர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். அவர்களுடன் புகைப் படமும் எடுத்துக்கொண்டார் தோனி. இதைப் போலவே பிராவோ, இம்ரன் தகிர், சுரேஷ் ரெய்னா ஆகியோ ரும் சென்னை ரசிகர்களுக்கு டென்னிஸ் பந்துகள், டிஷர்ட்டு கள், கிரிக்கெட் தொப்பிகளை பரிசளித்து மகிழ்ந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close