[X] Close

டெஸ்ட், ஒருநாள் அணிகளின் தரவரிசைப் பட்டியல்: மாற்றங்களுடன் ஐசிசி புதிதாக வெளியீடு


  • kamadenu
  • Posted: 02 May, 2019 15:20 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் ஒருநாள் அணியில் இங்கிலாந்து அணி முதலிடமும், டெஸ்ட் தரவரிசையில் இந்தியஅணி முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளை நீக்கிவிட்டு, 2016-17, 2017-18 ஆண்டில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையி்ல இந்த தரவரிசைப்பட்டியலை ஐசிசி வடிவமைத்துள்ளது. அதன்படி பல்வேறு அணிகளின் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒருநாள் தரவரிசையைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை இந்திய அணி 121 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் இருந்த நியூஸிலாந்தை 4-வது இடத்துக்கு தள்ளி தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 115 புள்ளிகளுடனும், நியூஸிலாந்து 113 புள்ளிகளுடன் உள்ளன.

இங்கிலாந்து அணி தற்போது தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரிலும், அயர்லாந்துடனும் இங்கிலாந்து மோதுகிறது.

vira.jpg 

இங்கிலாந்து தனது முதலிடத்தை தக்கவைக்க வேண்டுமானால், அயர்லாந்து அணியை வென்று, பாகிஸ்தான் அணியை 3-2 என்ற கணக்கில் தோற்கடிக்க வேண்டும் அல்லது அயர்லாந்து அணியிடம் தோற்றால்கூட, பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.

கடந்த ஓர் ஆண்டில் ஏராளமான ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோற்றதால், 109 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 5-வது இடத்தில் இருக்கிறது. 96 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 6-வது இடத்திலும், வங்கதேசம் 86 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன. மேற்கிந்தியத்தீவுகள் 4 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 80 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கும், 76 புள்ளிகளுடன் இலங்கை அணி 9-வது இடத்துக்கும் பின்தங்கியது.  64 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் 10-வது இடத்தில் இருக்கிறது.

டெஸ்ட் தரவரிசையைப் பொறுத்தவரை, இந்திய அணி 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 2-வது இடத்தில் 111 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும்,  108 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

nz.jpg 

இந்த தரவரிசையில் முக்கிய மாற்றமாக, இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன், ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 98 புள்ளிகளுடன் 5-வதுஇடத்தில் உள்ளது.

இலங்கை அணி 94 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது. 7-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும், 8-வது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் 11 ஆக இருந்த நிலையில் தற்போது 2 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. பாகிஸ்தான் 84 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், மே.இ.தீவுகள் 82 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் 65 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே 16 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close