[X] Close

ரெய்னாவின் பாதையை மறைத்த ரிஷப் பந்த்; தோனியிடம் இது வேண்டாம் - எச்சரித்த ரசிகர்கள்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 14:07 pm
  • அ+ அ-

டெல்லி அணியுடனான போட்டியில் சிஎஸ்கே வீரர் ரெய்னா ஆடும்போது  கீப்பர் ரிஷப் பந்த் அவரது பாதையை மறைத்து விளையாடினார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இதனை தோனியிடம் செய்துவிடாதீர்கள் என்று கிண்டல் செய்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில்  தோனி, தாஹிர், ரெய்னா, ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன் மூலம் 13 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றியும், 4 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்து, 18 புள்ளிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன்பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கி சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் வாட்சன் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரெய்னா டூபிளசிஸ்ஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதில் ரெய்னா பேட் செய்வதற்கு வரும்போது அவரை டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடையில் நின்று தடுத்தார். ரெய்னா சிரிந்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் இதனை தோனியிடம் (இதற்கு வங்கதேச வீரர் ஒருவர் தனது பாதையை மறைத்தபோது தோனி வேகமாக் வந்து மோதுவார் அதனை நினைவு வைத்து ரசிகர்கள் இதனை கூறினர்) செய்துவிடாதீர்கள் என்று கிண்டல் செய்தனர்.

வீடியோ 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close