[X] Close

'விஸ்வாசம்' பாணியில் சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ட்வீட்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 11:52 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை, 'விஸ்வாசம்' பட பாணியில் ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா, தோனி ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தும், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசியும் சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.

இந்த வெற்றி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இஞ்யார்ரா, பேரு சென்னை சூப்பர் கிங்க்ஸ். ஊரு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து ஐபிஎல்-ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க. நம்ம சூப்பர்  பேன்ஸ். நாங்களும் தயார்! ரசிகர்களின் உறுதுணைக்கு நன்றி.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் அடுத்ததாக மே 5-ம் தேதி பஞ்சாப் அணியோடு மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஹர்பஜன் சிங் ட்வீட் 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close