[X] Close

என் பெயரை சொல்லி யாரும் அழைப்பதில்லை; ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 02 May, 2019 11:37 am
  • அ+ அ-

ரசிகர்களால் தான் ‘தல’ என்று அழைக்கப்படுவது குறித்து சிஎஸ்கே அணி தலைவர் நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில்தோனியின் பேட்டிங், ஸ்டெம்பிங், கேப்டன்ஷிப் திறமை, ரெய்னாவின் பேட்டிங், தாஹீர், ஜடேஜாவின் பந்துவீச்சு ஆகியவற்றால்டெல்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன் மூலம் 13 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றியும், 4 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்து, 18 புள்ளிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தநிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற தோனியிடம் கிரிக்கெட் வர்ணையாளர் அர்ஷா போக்லே ‘தல’ என ரசிகர்கள் அழைப்பது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு தோனி, “தல என்ற பெயரை பெற்றது மிகவும் சிறப்பானது. எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய செல்லப் பெயர் இது.  சிஎஸ்கேவின் அறிமுக பாடலிலேயே இந்தப் பெயர் இடப்பெற்றுள்ளதை நான் அறிந்திருக்கவில்லை.

அந்தப் பாடலில் அங்கமாக ‘தல’ என்ற பெயர் இருந்தத்தை நான் சில ஆண்டுகளுக்கு பின்னர்தான் அறிந்தேன். தமிழ்நாடு மற்று தென்னிந்தியாவில் நான் எங்கு சென்றாலும் அவர்கள் என் பெயரை சொல்லி அழைப்பதில்லை. தல என்றுதான் அழைக்கிறார்கள். இது நிச்சயம் சிறப்பானது. அவர்கள் என்னை மட்டும் ஆதரிக்கவில்லை ஒட்டு மொத்த அணியையும் ஆதரிக்கிறார்கள்” என்றார்.

மேலும், இம்ரான் தாஹிர்  குறித்து கூறும்போது, அவர் விக்கெட் எடுத்து அதனை கொண்டாடுபடுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இம்ரான் கான் விக்கெட் எடுத்தவுடன் அடுத்த முனைக்கு சென்று அதனை கொண்டாடுவார். அதனால்  நானும் வாட்சனும், காத்திருப்போம் அவர் தனது இடத்திற்கு வந்ததும் வாழ்த்துகள் கூறுவோம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close