[X] Close

நியூஸி. ஓபனில் சாய்னா நெவால் அதிர்ச்சி தோல்வி


  • kamadenu
  • Posted: 02 May, 2019 09:03 am
  • அ+ அ-

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், 212-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஸிஹியுடன் மோதினார். இதில் சாய்னா நெவால் 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 21-15, 18-21, 10-21 என்ற செட் கணக்கில் தைவானின் வாங் ஸூ வெயிடம் வீழ்ந்தார். அதேவேளையில் ஹெச்.எஸ்.பிரனோய் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close