[X] Close

2018-19-ம் ஆண்டில் 2,024 போட்டிகளை நடத்தி பிசிசிஐ சாதனை


2018-19-2-024

  • kamadenu
  • Posted: 01 May, 2019 09:25 am
  • அ+ அ-

பிசிசிஐ வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யுள்ளதாவது:

2108-19-ம் ஆண்டில் அதிக அளவில் உள் நாட்டில் கிரிக் கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள் ளன. 2018-19-ம் ஆண்டின் கடைசி கிரிக்கெட் போட்டியாக வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அமையவுள்ளது.

இந்த அளவுக்கு அதிகமாக ஓராண்டில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.இந்த ஆண்டில் 2,024 போட்டிகள் நடந்துள்ளன. மொத்தம் 37 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளன. மொத்தமாக கிரிக்கெட் போட்டி களைக் கணக்கிடும் 3,444 நாட் களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டுள் ளன. இதற்கு முன்பு 2017-18-ம் ஆண்டில் 28 அணிகள் பங்கேற்று 1,032 போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம் 1,892.5 நாட்களில் போட்டி கள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு டன் ஒப்பிடும்போது போட்டி நடத்தப்படும் நாட்களின் சதவீதம் 81 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 13,015 விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்காக பதிவு செய்தனர். இதில் 6,471 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்று விளை யாடினர். 100-க்கும் அதிகமான நகரங்களில் சீனியர் மற்றும் பல் வேறு வயதினருக்கான போட்டி களை பிசிசிஐ நடத்தியது. மேலும் 170 வீடியோ ஆய்வாளர்கள், ஸ்கோரர்களை பணியில் அமர்த்தி போட்டிகளை பிசிசிஐ இணைய தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close