[X] Close

இந்திய ஹாக்கி அணியில் மீண்டும் இடம்பிடித்தார் ரூபிந்தர் பால் சிங்


  • kamadenu
  • Posted: 01 May, 2019 09:22 am
  • அ+ அ-

புவனேஷ்வரில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் ஹாக்கி சீரிஸ் பைனல் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு எதிராக இரு ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி அதன் பின்னர் ஆஸ்திரேலியா ஏ, மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா ஒரு ஆட்டங்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் வரும் 10-ம் நடக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டிராக்-பிளிக்கர் ரூபிந்தர் பால் சிங் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். அனுபவம் வாய்ந்த வீரரான ரூபிந்தர் பால் சிங், காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்தார். கடைசியாக அவர், கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.

மேலும் அறிமுக வீரராக ஜஸ்கரன் சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக நடுகள வீரரான மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக சுரேந்தர் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கோல்கீப்பர்களாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பி.பதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்:கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பி.பதக்.

டிபன்டர்கள்: ரூபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், ஹர்மான்பிரீத் சிங், பைரேந்திர லக்ரா, குரிந்தர் சிங், கோதாஜித் சிங்.

நடுகள வீரர்கள்: ஹர்திக் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜஸ்கரன் சிங், விவேகக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா.

முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், குர்சாஹிப்ஜித் சிங், அக் ஷ்தீப் சிங், சுமித் குமார், அர்மான் குரேஷி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close