[X] Close

எதற்காகச் செய்தார் அஸ்வின்?- விர்திமான் சாஹாவை 2 முறை மன்கட்அவுட் செய்ய முயற்சி?: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்


2

  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 12:03 pm
  • அ+ அ-

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் இருமுறை விர்திமான் சஹாவை மன்கட் அவுட் செய்ய முயற்சித்தும் முடியவில்லை..

கிரிக்கெட் போட்டியில் ஐசிசி விதிமுறைகளின்படி மன்கட் அவுட் செய்யும் முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றாலும் ஸ்பிரிட் ஆப் த கிரிக்கெட் பேட்ஸ்மேனை எச்சரித்து செய்ய வேண்டும்

ஆனால், இந்த ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டை மீறி இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜோஸ் பட்லரை எச்சரிக்காமல் மன்கட் அவுட் செய்த அஸ்வினின் செயல் விதிகளின்படி சரியென்றாலும், தார்மீக அடிப்படையில் தவறாக  பார்க்கப்படுகிறது. அதேபோல கடந்த 21-ம் தேதி டெல்லி அணிக்கு எதிராக ஷிகர் தவணை மன்கட் அவுட் செய்ய முயன்ற அஸ்வின் முயற்சித்தார். அப்போது அது தோல்வியில் முடியவே தவணின் கிண்டலுக்கு ஆளாகினார்.

asw.jpg 

இதனால், இந்த ஐபிஎல் சீசனில் மன்கவுட் முறை என்பது அஸ்வின் மீது பெரும் விமர்சனங்களையும் ஃபேர் கிரிக்கெட் அணி என்பதிலும் மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வீரர் குர்னல் பாண்டியாவுக்கு இதேபோன்ற மன்கட் அவுட் செய்ய வாய்ப்பு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கிடைத்தது. ஆனால், அப்போது பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வாலை எச்சரித்து அனுப்பினார் குர்னல் பாண்டியா. இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதைபோன்ற மன்கட் அவுட் சம்பவத்தை ஹைதராபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அரங்கேற்ற அஸ்வின் முயன்றார். டேவிட்வார்னரும், சாஹாவும் தொடக்கத்தில் இருந்தே அடித்து விளையாடினர். இவர்களைப் பிரிக்க முயன்றும் முடியவில்லை.

6-வது ஓவரை அஸ்வின் வீசினார். அந்த பந்தை வார்னர் எதிர்கொண்டார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார் வார்னர். 2-வது பந்தை வீச ஓடி வந்த வார்னர், ஸ்டெம்ப் அருகே வந்ததும் நின்றுவிட்டு சாஹாவைப் பார்த்தார். ஆனால், அப்போது சாஹா கிரீஸ்க்குள் இருந்தார். இதனால் அமைதியாகச் சென்றுவிட்டார் அஸ்வின்.

4-வது பந்தைவீச அஸ்வின் வீச ஓடிவந்தார். அப்போது கிரீஸ் அருகே வந்ததும் அஸ்வின் நின்றுவிட்டு சாஹாவைவின் கிரீஸைப் பார்த்தார் அப்போது சாஹா கிரீஸுக்குள் இருந்தார். மீண்டும் அமைதியாகச் செல்லவே, நடுவர் அஸ்வினை அழைத்து, பந்துவீச வந்து பாதியிலேயே இரு முறை செய்வது குறித்து கேட்டறிந்தார்.

ass.PNG 

அஸ்வின் செயல்பாடு விர்திமான் சாஹாவை மன்கட் அவுட் செய்ய பந்துவீசாமல் பாதியிலேயே நின்றாரா அல்லது, வார்னர் ஸ்விட் ஹிட் ஷாட் அடிப்பதை திசைதிருப்ப அவ்வாறு செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அஸ்வின் பாதியிலேயே நின்ற இரு தருணத்திலும் சாஹா கிரீஸுக்குள்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tiw.PNG 

அஸ்வினின் நேற்றைய செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். " இது விதமான அவுட் ஆக்கும் முறையா அஸ்வின். இது சரியான வழியில் விளையாடும் கிரிக்கெட் அல்ல" என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

asm.PNG 

" அஸ்வின் அனைத்தையும் மறந்துவிட்டாரா, அவரைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார். தோனியுடன் இணைந்து அஸ்வின் கிரிக்கெட் விளையாடினார் என்பதை நம்பமுடியவில்லை. மோசமான அணுகுமுறை" என்று விமர்சித்துள்ளனர். பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கும் கோழைத்தனமான முயற்சி என்று கடுமையாக அஸ்வின் செயலை விமர்சித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close