[X] Close

கேல் ரத்னா விருதுக்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் பெயர்கள் பரிந்துரை


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 07:56 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

இந்திய மல்யுத்த சங்கமானது பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோரது பெயர்களை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பஜ்ரங் பூனியா சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியிலும் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

அதேவேளையில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் ராகுல் அவாரே, ஹர்பிரீத் சிங், திவ்யாகரன், பூஜா தண்டா ஆகியோரது பெயர்களை அர்ஜூனாவிருதுக்கும் வீரேந்தர் குமார், சுஜித் மான், நரேந்திர குமார், விக்ரம் குமார் ஆகியோரது பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கும் பீம் சிங், ஜெய் பிரகாஷ் ஆகியோரது பெயர்களை தயான்ச் சந்த் விருதுக்கும் (வாழ்நாள் சாதனையாளர் விருது) பரிந்துரை செய்தது இந்திய மல்யுத்த சங்கம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close