[X] Close

பணிவான விருது: கோலியை கிண்டல் செய்த பஞ்சாப் அணி


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 13:57 pm
  • அ+ அ-

ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியை கிண்டல் செய்யும் விதமாக பஞ்சாப் அணி விருது ஒன்றை வழங்கியுள்ளது.

கடந்த முறை ஆர்சிபி, கிங்ஸ் லெவன் போட்டியில்  உமேஷ் யாதவ் வீச தன் முதல் பந்தில் அஸ்வின் பெரிய சிக்சரை அடித்தார். அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்.

கேட்சைப் பிடித்த கோலி  தன் வலது கையை அசிங்கமாக ஆட்டி அஸ்வினுக்கு சென்ட் ஆஃப் கொடுத்தார். அதாவது அவர் கையை ஆட்டிய விதம் ‘நீ என்ன செய்து விட முடியுமா?’ என்பது போல் அமைந்தது.

அஸ்வின் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது  தன் தொப்பியையும் கிளவுஸையும் வழக்கத்துக்கு விரோதமாக ஆவேசமாகத் தூக்கி எறிந்து பதிலடி கொடுத்தார்.

நேற்று டெல்லி அணியுடனான முக்கிய போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கோலி அணி இழந்தது.

 இந்த நிலையில்ஆர்சிபி கேப்டன் விராட் கோலியை கிண்டல் செய்யும் வகையில் விருது ஒன்றை பஞ்சாப் அணி அறிவித்தது.

அதில், பஞ்சாப் உடனான போட்டியில் ஆர்சிபி அணி கேப்டன் கோலி பணிவாக நடந்து கொண்டதற்காக அவருக்கு ஸ்டுவர்ட் போர்ட் ஹுமிலிட்டு அவார்ட்டை வழங்குகிறோம் என்று கூறியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close