[X] Close

கால்பந்து கலாச்சாரத்தை பின்பற்றிய ஹர்த்திக் பாண்டியா, கே. எல். ராகுல் 


kl-rahul-and-hardik-pandya-exchange-their-jerseys-after-match

  • kamadenu
  • Posted: 17 May, 2018 16:18 pm
  • அ+ அ-

மும்பை அணி வீரர் ஹர்த்திக் பாண்டியாவும், பஞ்சாப் வீரர் கே.எல். ராகுலும் தங்கள் அணி ஆடையை மாற்றிக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது.

மும்பைக்கு எதிராக நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் செல்லும் வாய்ப்பு சற்று மங்கியுள்ளது. 

கே.எல்.ராகுலின் தனிப்பட்ட முயற்சி  பயனற்றுப் போனதைத்  தொடர்ந்து  கிங்ஸ் லெவன் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல்  60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.  நன்றாக விளையாடியும் தனது அணி தோல்வி அடைந்ததால் சற்று வருத்தமாகவே காணப்பட்டார் ராகுல்.

அணியின் ஆடைகளை மாற்றிக் கொண்ட கே.எல்.ராகுல், ஹர்த்தி பாண்டியா

கால்பந்து ஆட்டங்களின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரரும் தோல்வி அடைந்த அணி வீரரும் தங்களது அணியின் உடைகளை மாற்றி அணிந்து கொள்வார்கள். அந்த வகையில் கே. எல். ராகுலும், ஹர்த்திக் பாண்டியாவும் தங்களது ஆடைகளை மாற்றி அணிந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதுகுறித்து கே.எல் ராகுல் கூறும்போது,  நாம் கால்பந்தில் இதனை அதிகம் பார்த்திருப்போம். இந்தக் கலாச்சாரத்தை நானும் ஹர்த்திக்கும்  கிரிக்கெட்டுக்கு கொண்டு வர எண்ணினோம்.  நாங்கள் இதை முன்பே முடிவு செய்ய வில்லை. ஆட்டம் முடிந்தபிறகு யதேச்சையாகத்தான் இந்த எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. இது ஒரு நல்ல விஷயம்" என்றார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close