[X] Close

ஆர்சிபி பவுலிங் சொதப்பல்: ஹர்திக் பாண்டியா விமர்சனம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 15:06 pm
  • அ+ அ-

நேற்று மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. இதில் ஹர்திக் பாண்டியா கடைசியில் பவன் நெகியை ஒரே ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

 

ஆர்சிபி அணியின் பந்து வீச்சு படு சொதப்பலாக 6 ஓவர் 67,  10.3 ஓவர் 104 என்று விளாசித்தள்ளினர். மும்பையில் யாருமே அரைசதம் எடுக்காவிட்டாலும் ஸ்கோர் விகிதம் ஓவருக்கு 10 என்ற விகிதத்தில் சென்று கொண்டிருந்தது.

 

உமேஷ் யாதவ் 2 ஓவர்களில் 25 கொடுத்து ஓவரை முடிக்கவில்லை, நவ்தீப் சைனி 3 ஓவர் 34, முகமது சிராஜ் 2 ஓவர் 21 ரன்கள் என்று மூவரும் சேர்ந்து 7 ஓவர்களில் 80 ரன்களைக் கொடுக்க ஸ்பின்னர்கள் சாஹல், மொயின் அலி சேர்ந்து 8 ஓவர்களில் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், பவன் நெகி நன்றாக வீசினாலும் அவரை சரியாகக் கோலி பயன்படுத்தாததால் 4 ஓவர் 47 என்று வாங்கப்பட்டார்.

 

ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 37 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

 

இவர் நேற்றைய வெற்றி குறித்து கூறியதாவது:

 

தொடக்க வீரர்கள் விரட்டலை நன்றகா அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. அதனால் எங்களுக்கு சுலபமாக அமைந்தது. ஆர்சிபி அணி பவர் ப்ளேயில் சொதப்பலாக வீசினர் இதுதான் அவர்களைக் காயப்படுத்து விஷயம் என்று நான் கருதுகிறேன்.

 

பிட்ச் நடத்தையைப் பார்த்தால் ஆர்சிபி 170-180 எடுப்பார்கள் என்று நினைத்தேன். காரணம் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கே பந்தை அடிக்க கஷ்டமாக இருந்தது. டிவில்லியர்ஸ் விக்கெட் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. 15 ரன்கள் வித்தியாசம் அந்த விக்கெட் மூலம் ஏற்பட்டது. இதுதான் கடைசியில் உதவியது.

 

இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close