[X] Close

தோனியை 3 போட்டிகளுக்கு தடை செய்ய வேண்டும்: நடுவரிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் சேவாக் ஆவேசம்


3

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 19:23 pm
  • அ+ அ-

ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான ஆட்டத்தில் நடுவருடன் மகேந்திரசிங் தோனி விவாதம் செய்திருக்கக் கூடாது, தோனியை குறைந்தபட்சம் 3 போட்டிகளுக்காவது தடை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது

இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்தை சான்ட்னர்  எதிர்கொண்டார். இந்த பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் சென்றது அதற்கு ஸ்ட்ரைட் அம்பயர் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட் நோ-பால் அளித்தார். ஆனால், லெக் அம்பயர் உல்ஹாஸ் காந்தே நோபாலை ரத்து செய்தார். நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

seag.jpg 

ஆனால், நோ பால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள்? என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார்.  இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனியின் செயல் குறித்து ஏற்கனவே பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய அணிக்காக தோனி ஏராளமாக செய்துள்ளார் அதை மறுப்பதற்கில்லை. நான் அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், தோனி இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்தபோது, கோபப்பட்டு நான் பார்த்தது இல்லை.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக வந்தபின் சிறிது உணர்ச்சிவசப்பட்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடந்து கொண்டார் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசிநேரத்தில் தோனி மைதானத்துக்குள் வந்திருக்கக் கூடாது. ஏனென்றால், ஏற்கனவே 2 சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் உள்ளே இருக்கிறார்கள். அவர்கள் நடுவரிடம் நோ-பால் குறித்து பேசுவதற்கு தகுதியானவர்கள்தான்.

argue.jpeg 

என்னைப் பொறுத்தவரை தோனி மைதானத்துக்குள் சென்றிருக்கக் கூடாது. அவருக்கு குறைந்தபட்சம் 2 போட்டிகள் அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும். ஏனென்றால், தோனி இதை செய்தபின், நாளை வேறு ஒரு அணியின் கேப்டனும் இதேபோன்று செய்யமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு கேப்டனும் செய்தால், களத்தில் இருக்கும் நடுவருக்கு என்ன மதிப்பு இருக்கிறது.

ஆதலால், என்னைப் பொறுத்தவரை தோனிக்கு சில போட்டிகள் தடை விதித்து அவரை ஐபிஎல் போட்டியில் இருந்து விளையாடமல் செய்வது ஐபிஎல் போட்டியில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும். தோனி மைதானத்துக்கு வெளியே இருந்திருக்க வேண்டும், அல்லது 4-வது நடுவரிடம் வாக்கி-டாக்கி மூலம் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கலாம்.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

தோனி மைதானத்துக்குள் நுழைந்தது ஐசிசி 2.20 விதியின்படி லெவன் 2 வகை விதிமீறலாகும். இந்த விதிமீறலுக்கு ஐசிசி விதியின்படி குறைந்தபட்சம் 2 போட்டிகளுக்கு தடைவிதிக்க முடியும். ஆனால், 50 சதவீதம் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close