[X] Close

உதவி செய்யும் குணம் தோனிக்கு அதிகம், மிகச்சிறந்த மனிதர்: இம்ரான் தாஹிர் புகழாரம்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 16:11 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

தோனிக்கு உதவி செய்யும் குணம் அதிகம், மிகச்சிறந்த மனிதர், கேப்டன், பழகுபவர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவர் என்று தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனி , தி எம்எஸ் தோனி கிரிக்கெட் அகாடெமி நடத்தி வருகிறார். இந்தியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் மொத்தம் 17 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய கிளையை கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் இன்று புதிதாக கிளை திறக்கப்பட்டது.

இந்த புதிய கிளை திறப்புக்கு தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அவரிடம் நிருபர்கள் தோனி குறித்து கேள்வி எழுப்பினார்கள். அவர் கூறுகையில், " என்னைப் பொறுத்தவரை தோனி மிகச்சிறந்த தலைவர். அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் சிறந்த கேப்டன். அனைவருக்கும் உதவும் உள்ளம் கொண்ட நல்ல மனிதர். இந்த குணத்தில் காரணமாகவே நான் தோனி நடத்தும் அகாடெமியில் சேர்ந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டேன். தோனியுடன் பழகும் அனைவருக்கும் அவரின் பேச்சு, செயல்பாடு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் " எனத் தெரிவித்தார்.

tahir.jpg 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் நடுவரிடம் தோனி வாக்குவாதம் செய்த செயலை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துள்ளார்கள். அது குறித்து இம்ரான் தாஹிரிடம் நிருபர்கள் கேட்டபோது, அந்த கேள்விக்கு பதில் அளிக்க தாஹிர் மறுத்துவிட்டார்.

இந்திய அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து இம்ரான் தாஹிரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், " குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசுகிறார். அடுத்து வரும் உலகக் கோப்பைப் போட்டியில் குல்தீப் யாதவ் பந்துவீச்சு பெரிய அளவில் பேசப்படும். இந்த முறை உலகக் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம். ஐபிஎல் தொடர் முடிந்தவுடந் விரைவில் அணியில் இணைய காத்திருக்கிறேன் " எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close