[X] Close

அரை இறுதிக்கு முன்னேறினார் சிந்து


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:12 am
  • அ+ அ-

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, 18-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யன்யனை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

அரை இறுதியில் சிந்து, முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் நோஸோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். ஒகுஹரா தனது கால் இறுதியில் 21-8, 21-13 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவாலை தோற்கடித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 6-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 18-21, 21-19, 9-21 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மோமோடோவிடம் வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா 10-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனிடம் தோல்வியடைந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close