[X] Close

மீண்டும் ஆர்சிபி அணிக்கு வருகிறாரா டேல் ஸ்டெயின்?


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 11:05 am
  • அ+ அ-

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விரைவில் இணைய உள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்ட்ராகிராமில் டேல் ஸ்டெயின் இந்தியாவின் விசா குறித்த புகைப்படத்தை வெளியிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்சிபி அணிக்கு திரும்புகிறார் ஸடெயின் என்று நம்பி ட்விட்டரில் ஸ்டெனை வரவேற்றுள்ளனர்.

அதற்கு ஏற்றார்போல் ஆர்சிபி அணி வீரரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் கோல்டர் நீல் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்புவதால் அவருக்கு பதிலாக ஸ்டெயினை அழைப்பது குறித்தும் ஆர்சிபி அணி நிர்வாகம் பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால், ஸ்டெயின் மீண்டும் ஆர்சிபி அணிக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தனது வருகை குறித்து ஸ்டெயின் அதிகாரபூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒருபோட்டியில் கூட இதுவரை வெற்றி பெறவில்லை. இதனால், தார்மீகரீதியான நம்பிக்கை இழந்திருக்கும் அந்த அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஸ்டெயின் வருகை இருக்கும். அணியில் ஏற்கெனவே உமேஷ் யாதவ், டிம் சவுதி, கோலின் டி கிராண்ட்ஹோம், மார்கஸ் ஸ்டோனிஸ் இருந்தபோதிலும் பந்துவீச்சில் சிறப்பாக பங்களிப்பு ஏதும் இல்லை. ஸ்டெயின் வருகை ஆர்சிபி அணிக்கு வலு சேர்க்கும்.

 

rcb.jpg 

இதற்கு முன் டேல் ஸ்டெயின் கடந்த 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை ஆர்சிபி அணியில் ஸ்டெயின் விளையாடியுள்ளார். அதன்பின் 2011-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஸ்டெயின் இடம் பெற்றார். அதன்பின் சன்ரைசர்ஸ் அணியிலும், குஜராத் லயன்ஸ் அணியிலும் இடம் பெற்று விளையாடிய ஸ்டெயினை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close