[X] Close

'களத்துல மொறப்போம்; வெளில வெள்ளந்தியா சிரிப்போம்': சிஎஸ்கே குறித்து ஹர்பஜன் தெறிக்கவிடும் கருத்து


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 10:28 am
  • அ+ அ-

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், களத்துல மொறப்போம், வெளில வெள்ளந்தியா சிரிப்போம் என்று தமிழலில் ட்விட் செய்துள்ளார்.

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்பூரில் நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 வி்க்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப்ப பெற்றது.

இந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்தை சான்ட்னர்  எதிர்கொண்டார். இந்த பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றது அதற்கு லெக் அம்பயர் , நோ-பால் அளித்தார். ஆனால், ஸ்டிரைட் அம்பயர் நோபாலை ரத்து செய்தார். நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த தோள்பட்டைக்கு மேலே பந்துவீசப்பட்டும் நோ பால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து நோ-பாலை ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார்.  இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்டக் அவுட் செய்தார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின்.  அத்தோடு அந்தபிரச்சினை முடியாமல், போட்டி முடிந்தபின் வீரர்கள் கைகொடுத்துக்கொண்ட போது பட்லரும், அஸ்வினும் முறைத்துக்கொண்டனர்.

harbaj.PNG 

ஆனால், சிஎஸ்கே அவ்வாறு நடந்து கொள்ளாது எனும் ரீதியால் அந்த அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்துள்ளார். அவரின் ட்விட்டில், " நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் விளையாட வந்திருக்கல. ஆனா அங்கேயும் ஐபிஎல்ல எங்களோட தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில் சென்னை ஐபிஎல்ல தூள் கிளப்பாத இடமுமில்ல.களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்,நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் " எனத் தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close