[X] Close

கொல்கத்தா அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்


shah-rukh-khan-apologises-for-lack-of-spirit

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 May, 2018 13:29 pm
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

இந்நிலையில், கொல்கத்தா அணி வீரர்களின் உற்சாக குறைபாட்டுக்காக அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக, ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "விளையாட்டு என்பது உற்சாகத்துடன் தொடர்புடையது. வெற்றி தோல்வியெல்லாம் அதன் பின்னர்தான் கணக்கில் வரும். ஆனால், இன்றிரவு கொல்கத்தா வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகமின்மைக்காக நான் ரசிகர்களிடன் மன்னிப்பு கேட்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில், முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

இது மிக மோசமான தோல்வி என கொல்கத்தா வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஷாருக்கானின் இந்த ட்வீட் கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close