[X] Close

பகலிரவு டெஸ்ட் போட்டி தங்களுக்கு ஒத்து வராது என்பது இந்தியாவுக்கு தெரியும்: மைக்கேல் க்ளார்க்


michael-clarke-dn-test-india-spinners

கோப்புப் படம்: பிடிஐ

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 09 May, 2018 19:31 pm
  • அ+ அ-

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இது. அதனால் தான் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க் தெரிவித்துள்ளார். 

இந்த வருடத்தின் கடைசியில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றிலும் ஆட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதை பிசிசிஐ நிராகரித்துவிட்டது. 

இது குறித்து பேசிய மைக்கேல் க்ளார்க், "ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த உகந்த சூழல் எது என்பது இந்தியாவுக்குத் தெரியும் என நினைக்கிறேன். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றதே இல்லை. இந்த சுற்றுப்பயணம் அதற்கான ஒரு வாய்ப்பு.

இந்தியா, பகல் நேர டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது களம் தட்டையாகவும், சுழற்பந்துக்கு சாதகமாகவும் இருக்கும். ஆனால் பகலிரவு போட்டியில் ஆடினால் அப்போது சுழற்பந்துவீச்சு எடுபடாது. பனி இருக்கும். அதனால் இந்திய அணி இதுநாள் வரை எப்படி ஆடினார்களோ, அதே போல பகல் நேர போட்டியில் மட்டுமே விளையாடி வெற்றி பெற நினைக்கிறார்கள். எனவே அவர்கள் ஏன் பகலிரவு போட்டியில் விளையாட மறுக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

-ஐஏஎன்எஸ்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close