[X] Close

தமிழ் தலைவாஸில் புதுமுகங்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:26 am
  • அ+ அ-

புரோ கபடி 7-வது சீசனுக்கான ஏலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்றது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 12 அணிகளும் ஒட்டுமொத்தமாக ரூ.50 கோடியை செலவழித்து 200 வீரர்களை ஏலம் எடுத்தனர். இந்த வகையில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 10 வீரர்கள் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக ரைடரான ராகுல் சவுத்ரி ரூ.94 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களாக ஹரியாணாவை சேர்ந்த ஹிமான்ஷு, டெல்லியைச் சேர்ந்த எம்.அபிஷேக் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் டிபன்டர்கள். இவர்களுடன் ஆல்ரவுண்டரான ரேன் சிங் ரூ.55 லட்சத்துக்கும், டிபன்டர் மற்றும் வலது கார்னரில் சிறப்பாக செயல்படக்கூடிய மொஹித் சில்லார் ரூ.45 லட்சத்துக்கும், டிபன்டரான அஜீத் ரூ.32 லட்சத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மிலாத் ஷிபக், ஷபீர் பாபு, யஷ்வந்த் பிஷ்னோய், வீனீத் சர்மா, அஜித் குமார், ஹேமந்த் சவுகான், பொன் பார்த்திபன் சுப்பிரமணியன், ஆனந்த் ஆகியோர் தலாரூ.10 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நட்சத்திர வீரர்களான அஜய் தாக்குர்,மன்ஜித் சில்லார், விக்டர் ஆன்யங்கோ ஒபிரோ ஆகியோரை தமிழ் தலைவாஸ் அணி தக்கவைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close