[X] Close

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் சிந்து, சாய்னா


2

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:26 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் இந்தோனேஷியாவின் லானி அலெசாண்ட்ராவை எதிர்த்து விளையாடினார். 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-9, 21-7 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் டென்மார்க்கின் மியா பிளைசெஃபுடன் மோதுகிறார் சிந்து.

6-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 21-16, 21-11 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் யுலியா யோஸ்பின் சுசான்டோவை வீழ்த்தினார். 2-வது சுற்றில் சாய்னா நெவால், தாய்லாந்தின் சோ சு வாங்கை சந்திக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close