[X] Close

கடைசியில் 2 அபார ஓவர்களை வீசிய சந்தீப், கவுல்: வெற்றிக்கு வித்திட்ட ராகுல், மயங்க்; கிங்ஸ் லெவன் 3ம் இடம்


2-3

  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 07:17 am
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 22வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் அணி அட்டவணையில் 3ம் இடத்துக்கு முன்னேறியதோடு, மொஹாலியில் தோற்காக நிலையை தக்க வைத்துள்ளது.

 

சந்தீப் சர்மா, கவுல் வீசிய அபார 2 ஓவர்களால் நெருக்கடி:

 

கடைசி 3 ஓவர்களில் கிங்ஸ் லெவன் வெற்றிக்குத் தேவை வெறும் 18 ரன்களே. அப்போது நன்றாக நிலைப்பெற்று விட்ட ராகுல் 60 ரன்களுடனும்,  சிலபல பிரில்லியண்ட் ஷாட்களை ஆடிய மயங்க் அகர்வால் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

 

18வது ஓவரை ஹைதராபாத்தின் சந்தீப் சர்மா வீசினார். அகர்வால் முதல் பந்தை மிட்விக்கெட்டில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு அதே ஓவரில் அதிரடி வீரர் மில்லர், நன்றாக செட்டில் ஆன ராகுலையும் பெரிய ஷாட்கள் ஆட விடாமல் கடைசியில் மில்லரை வேகம் குறைக்கப்பட்ட பந்தில் வீழ்த்தினார்.  இந்த ஓவரில் 3 ரன்கள் 2 விக்கெட்டுகள்.

 

19வது ஓவரில் சித்தார்த் கவுல் 5 ரன்கள்தான் கொடுத்தார்.  டேவிட் மில்லராவது புது பேட்ஸ்மேன் அப்போதுதான் இறங்குகிறார், அவர் மெதுவாக ஆடினால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் செட்டில் ஆன ராகுல் சித்தார்த் கவுலின் அந்த ஓவரில் ஏன் பவுண்டரி அடிக்கவே முயற்சி செய்யவில்லை என்று தெரியவில்லை. அதே ஓவரில் கடைசி பந்தில் இதனால் டென்ஷனான மந்தீப் சிங் தூக்கி அடித்து கடைசி பந்தில் அவுட் ஆக. கடைசி ஒவரில் வெற்றிக்குத் தேவை 11 ரன்கள் என்று சற்றே பரபரப்பானது.

 

கடைசி ஒவரை ஆப்கன் ஆஃப் ஸ்பின்னர் மொகமது நபி வீசினார். இதில் ஒரு பவுண்டரி மூன்று 2 ரன்கள் ஒரு சிங்கிள் எடுத்து ராகுலும் சாம் கரனும் முடித்து வைத்தனர். ஒரு பந்து மீதம். கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். 4 போட்டிகளில் ராகுல் எடுக்கும் 3வது அரைசதமாகும் இது. இலக்கு சிறிதாக இருந்ததால் இதெல்லாம் பெரிய இன்னிங்ஸ் ஆகிவிடுகிறது. அன்று சிஎஸ்கேவுக்கு எதிராக 5 ஓவர்கள் பவுண்டரியே அடிக்காமல் ஓட்டியதை மறக்க முடியுமா?

 

முன்னதாக கிங்ஸ் லெவன் பவுலிங்கில் சன் ரைசர்ஸ் முடங்கியது, பிரமாத பார்மில் இருக்கும் பேர்ஸ்டோவை முஜிபுர் ரஹ்மான் விரைவில் பெவிலியன் அனுப்பினார். லெக் திசையில் அவரை முடக்கும் உத்தி பலனளித்தது, இரண்டு வைடுகள் சென்றாலும் கடைசியில் பேர்ஸ்டோ அதே போன்ற பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

warner.jpg 

வார்னர் 4 ரன்னில் இருந்தபோது ரன் அவுட் வாய்ப்பு நழுவ விடப்பட்டது.  டைட்டான பவுலிங்கில் பவர் ப்ளேயில் ஸ்கோர் 27/1 என்று சன் ரைசர்ஸ் திணறியது.  விஜய் சங்கர், வார்னர் இருந்தும் 5 ஒவர்கள் பவுண்டரியே வராத (?!) நிலையில் (ஏன் கண்டுக்கணும்?) 10வது ஓவரில்தான் 50 ரன்கள் வந்தது. அப்போது அழுத்தம் தாங்காத விஜய் சங்கர் 27 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 26 எடுத்த நிலையில் அஸ்வின் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

 

வார்னர் ஒரு முறை முஜீப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பினார், மீண்டும் முஜீபை லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார். ஆனால் வார்னர் ரகம் இல்லாத இன்னிங்சில் 49வது பந்தில் அரைசதம் எடுத்தார். வார்னரின் டி20 ஆமைவேக அரைசதமாகும் இது.  தீபக் ஹூடா 3 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சர் என்று மொகமது ஷமியை நன்றகாக் கவனிக்க சன் ரைச்ர்ஸ் அணி கடைசி 10 ஓவர்களிலி 100 ரன்கள் எடுத்து 150 என்ற ஸ்கோரை எட்டியது.  கிங்ஸ் லெவனில் அனைவருமே டைட்டாக வீசினர் முஜீப், ஷமி, அஸ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்த அங்கிட் ராஜ்புத் 4 ஓவர்களில் 21 ரன்களையே விட்டுக் கொடுத்தார். டேவிட் வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

 

கடந்த ஐபிஎல் தொடரில் தன்னை விளாசிய கெய்லை இம்முறை வீழ்த்திய ரஷீத்

 

கடந்த ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் 63 பந்துகளில் 104 ரன்களை விளாசிய போது ரஷீத் கானை ஓரே ஒவரில் 4 சிக்சர்கள் விளாசினார், அதுவும் இதே மைதானம்தா, ஆனாலும் நேற்றும் கெய்ல் பேட்டிங்கின் போது ரஷீத் கானிடம் ஓவர் கொடுக்கப்பட்டது.

gayle.jpg 

ஏற்கெனவே ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் என சிறுத்தை தன் வேட்டைக்காகக் காத்திருந்த நிலையில் ரஷீத் வந்தார், கெயில் அவரை சிக்ஸ் அடிக்க நினைத்து லாங் ஆனில் தூக்க தீபக் ஹூடா மிகப்பிரமாதமான கேட்ச் ஒன்றை எடுத்தார்.

 

கே.எல்.ராகுல் மீண்டும் தன் பார்முக்குத் திரும்பியதால் 34 பந்துகளில் அரைசதம் கண்டார், இதனை எட்ட முகமது நபியின் ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் இவரை விடவும் பிரமாதமாக ஆடியது இந்திய டெஸ்ட் ஓபனர் மயங்க் அகர்வால்.

 

அவர் 43 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 55 எடுக்க ராகுலும், அகர்வாலும் 14 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்த வெற்றி எளிதான சமயத்தில்தான் கடைசியில் கவுல், சந்தீப் சர்மா 2 அற்புத ஒவரை வீச ஆட்டம் கொஞ்சம் பரபரப்பானது, ஆனால் ராகுல், கரன் சேதமின்றி முடித்து வைத்தனர்.  ரஷீத் கான் மீண்டும் 4 ஓவர் 20 ரன் ஒரு விக்கெட் என்று அசத்தினார், சந்தீப் சர்மா 21 ரன் 2 விக்கெட். புவனேஷ்வர் குமார் 25 ரன் விக்கெட் இல்லை.

 

ஆட்ட நாயகன்: ராகுல்.

 

இன்றைய ஆட்டம்: சிஎஸ்கே / கொல்கத்தா : சென்னை இரவு 8.00 மணி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close