[X] Close

ஹைதராபாத் வெற்றிக்கு தடைபோடுமா மும்பை?


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 08:16 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பைஇந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய போதிலும் ஹைதராபாத் அணி ஹாட்ரிக் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்த நிலையில் அதன் பின்னர் ராஜஸ்தான், பெங்களூரு, டெல்லி அணிகளை துவம்சம் செய்தது ஹைதராபாத் அணி.

கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கவில்லை. எனினும் அது அணியின் செயல்திறனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. கேப்டனாக செயல்பட்ட புவனேஷ்வர் குமார், மொகமது நபி, சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்ற டெல்லி அணியை 129 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர்.

அதேவேளையில் பேட்டிங்கில் ஜானி பேர்ஸ்டோ மட்டையை சுழற்றி 48 ரன்கள் விளாச, ஹைதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. பார்மில் உள்ள பேர்ஸ்டோவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். கடந்தஆட்டத்தில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறிய டேவிட் வார்னரும் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளார்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தரஷித் கான், மொகமது நபி ஆகியோர் அணிக்கு வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். புவனேஷ்வர் குமாரும் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தகூட்டணி ரோஹித் சர்மா, யுவராஜ்சிங், சூர்யகுமார் யாதவ், குயிண்டன் டி காக், கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா ஆகியோரை உள்ளடக்கிய மும்பை அணியின் பேட்டிங் பட்டாளத்துக்கு சவால் தரக்கூடும்.

3 முறை சாம்பியான மும்பைஅணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி,2 தோல்விகள் மூலம் பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. வலுவானபேட்டிங் வரிசையை கொண்டஅந்த அணி இதுவரையிலும் முழுத்திறனை வெளிப்படுத்தவில்லை. எனினும் தனது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னைசூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் மும்பை அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணியிடம் இருந்து மீண்டும் ஒரு அபாரமான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close