[X] Close

கேட்சைத் தரையில் விட்டு ரிவியூ கேட்ட பாக். வீரர் ஷேஜாத்: வைரலான வீடியோவும் நெட்டிசன்கள் பாய்ச்சலும்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 17:52 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் வீரர் அமகது ஷேஜாத் உள்நாட்டு போட்டி ஒன்றில் லெக் திசையில் பவுண்டரி அருகே தெளிவாக கேட்சை தரையில் விட்டு விட்டு 3வது நடுவர் ரிவியூவுக்காக கையை அசைத்தது ரசிகர்ள் மத்தியில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

 

இந்த நிகழ்வு பாகிஸ்தான் கோப்பை போட்டி ஒன்றில் பெடரல் ஏரியாஸ் அணியும் கைபர் பதுன்கவா அணியும் மோதிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் நடந்தது.

 

கடைசி ஓவர் 4 பந்துகளில் கைபர் பதுன்கவா அணிக்கு தேவை 3 ரன்கள், அப்போதுதான் பேட்ஸ்மேன் தூக்கி அடித்த ஷாட் டீப் மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டருகே அகமது ஷேஜாத் கையில் வந்தது, மிக எளிதான கேட்ச் அது, அதை தவற விட்டு, கீழே சென்ற பந்தை கையால் எடுத்து கேட்ச் என்பது போல் 3ம் நடுவரை ரிவியூ கேட்டது சர்ச்சையாகியுள்ளது.

 

அவர் பந்தை தரையில் நழுவ விட்டது ஊர் உலகத்துக்கே தெரிந்தது.  இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஷேஜாத் கேட்ச் சர்ச்சை 

 

இவர் இப்படித்தான் திருந்தவே இல்லை, இன்னும் பழைய தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

 

நெட்டிசன் ஒருவர்,  “இலங்கைக்கு எதிராக இதுபோன்று செய்தார், இவரும் உமர் அக்மலும் உறவினர்கள் போலும். இருவருக்கும்  மூளை கிடையாது” என்று சாடியுள்ளார்.

 

ஒரு சில நெட்டிசன்கள் அவர் கேட்ச் விட்ட போட்டோவைப் போட்டு ‘உலக நடிப்புடா சாமி’ என்று ட்விட்டர் பதிவு செய்துள்ளனர்.

 

இன்னும் சிலர், ‘இவர் கேட்ச் விட்டதை தேர்ட் அம்யர் உறுதி செய்ய வேண்டுமாம்’ என்ன லொள்ளு’ என்று கேலி செய்துள்ளனர்.

 

மேலும் சிலர் மைதானம் முழுக்க கேமராக்கள் இருக்கும் போது மூளைகெட்டத் தனமாக அவர் நடந்து கொண்டது புரியாத புதிர் என்று காட்டம் காட்டியுள்ளனர்.

 

ஓரிருவர் ஷேஜாத் இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டியிலும் அவர் இவ்வாறு செய்ததை வீடியோவாக மறுபகிர்வு செய்து சாடியுள்ளனர்.

 

கடைசியில் எதிர்விதியாக கைபர் பதுன்க்வா அணி வென்றது.

 

அகமது ஷேஜாத்தின் பல்வேறு மோசடிகள் குறித்து பாக். கிரிக்கெட் வாரியம் அவரை பலமுறை எச்சரித்ததால் 2019 உலகக்கோப்பை உத்தேச வீரர்கள் பட்டியலில் ஷேஜாத் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close