[X] Close

7 மாதங்கள் கடினமாக இருந்தது; பயிற்சிகளிலேயே மூழ்கி கிடந்தேன்: மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா


7

  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:40 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்புசாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக ஹர்திக்பாண்டியா உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தியிருந்தார். பேட்டிங்கில் 8 பந்து களில் 25 ரன்கள் விளாசிய அவர், பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திஇருந்தார்.

அதிலும் முக்கியமான கட்டத்தில் தோனியை ஆட்டமிழக்கச் செய்து அணியின் வெற்றியில் பிரதான பங்குவகித்தார் ஹர்திக் பாண்டியா. ஆட்ட நாயகனாக தேர்வான ஹர்திக் பாண்டியா கூறுகையில், “அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தது சிறப்பான உணர்வாக உள்ளது. கடந்த 7 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமான காலக்கட்டமாக இருந்தது.

அவ்வளவு எளிதாக அமையவில்லை. என்ன செய்ய வேண்டும் என்றுகூட தெரியாமல் இருந்தேன். பேட்டிங் பயிற்சியிலேயே மூழ்கினேன்.

ஒவ்வொரு நாளும்எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண விரும்பினேன். இதுபோன்ற பேட்டிங்கின் மூலம்அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தது அற்புதமான உணர்வை தருகிறது.

காயத்தினால் நான் விளையாடாமல் இருந்தேன். மற்றும் சில சர்ச்சைகளும் (டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள்குறித்து இழிவாக பேசியது)நிகழ்ந்தன. இந்த நேரத்தில்கிடைத்த ஆட்ட நாயகன்விருதை எனது குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடினமான தருணங்களில் அவர்கள்தான் என்னுடன்இருந்தார்கள். இப்போதைக்குஎனது ஒரே கவனம் ஐபிஎல்தொடரில் விளையாடுவது தான்” என்றார். - பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close