[X] Close

தோனிக்காக காத்திருந்த மும்பை பாட்டி: வைரலாகும் வீடியோ


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 12:58 pm
  • அ+ அ-

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஐபில்எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை மட்டுமில்லாது தோனி விளையாடும் பிற மாநிலங்களிலும் அவருக்கும் மைதானங்களில் பலத்த ஆதரவு இருக்கும்.

அந்த வகையில் தோனியை பார்பதற்காக மும்பை வான்கடே மைதானத்துக்கு வந்திருந்த பாட்டி ஒருவரை தோனி  சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 15வது போட்டியில் தோனி தலைமை சிஎஸ்கே அணி முதல் தோல்வியைத் தழுவியது. பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வான்கடே மைதானத்துக்கு தோனியை விளையாடும் சிஎஸ்கே வை ஆதரிப்பதற்காக மும்பையை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்திருந்தார்.

போட்டி முடிந்த பின்னர் அதிகாரிகள் இதனை தெரிவிக்க தோனியிடம் தெரிவிக்க,  அவரை காண்பதற்காக தோனி வந்தார்.  தோனியை கண்டவுடன் அந்த பாட்டி தோனியின் கைகளை பிடித்துக் கொண்டு வாழ்த்துவார்.

தோனியும் அந்த பாட்டியுடன் பணிவாக பேசி செல்ஃபி புகைப்படம் எடுத்து கொள்வார்.

வீடியோ 

இந்த வீடியோ ஐபிஎல் ட்விட்டர் பக்கம் வெளியிட்டிருந்தது.இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close