[X] Close

சரியான இடத்தில் வீசவில்லையெனில் பவுலர்கள் விளாசப்படும் பிட்ச்: முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த தோனி


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 20:18 pm
  • அ+ அ-

மும்பையில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 15வது போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

சென்னை அணியில் மிட்செல் சாண்ட்னரை நீக்கி விட்டு மோஹித்சர்மாவை கொண்டு வந்துள்ளார் தோனி.

மும்பை அணியில் ஜேசன் பெஹெண்டார்ப் மற்றும் ராகுல் சாஹர் வந்துள்ளனர், மிட்செல் மெக்லினாகன், மயங்க் மார்க்கண்டே நீக்கம்.  ஹர்பஜன் மீண்டும் பெஞ்சில்.. தமிழ் ட்வீட் செய்ய தோனி அவருக்கு நிறைய பெஞ்ச் வாய்ப்புகளை வழங்குகிறார்.

ரோஹித் காயினை சுண்டி விட தோனி  தலை என்றார்.  தல கேட்க தலைதான் விழுந்தது, ஆனால் இலக்கை விரட்ட முடிவெடுத்தார்.

பிறகு தோனி கூறும்போது, “சரியான இடத்தில் வீசா விட்டால் பவுலர்கள் சாத்து வாங்கும் பிட்ச்களில் இதுவும் ஒன்று. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவிகரமாக இருக்கும். விரைவில் நாங்கள் தகவமைத்துக் கொண்டு சரியான இடங்களில் பந்து வீசுவது அவசியம்” என்றார்

நாங்கள் 3 போட்டிகளிலும் 175+ ஸ்கோரை எட்டினோம், என்றார் ரோஹித் சர்மா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close