[X] Close
 

தல... ஆட்டத்தில் மட்டும் நாயகன் அல்ல!


ipl-2018-ms-dhoni-spends-time-with-stadium-ground-staff

மைதான ஊழியர்களுடன் தோனி

  • இந்து குணசேகர்
  • Posted: 04 May, 2018 15:27 pm
  • அ+ அ-

இந்திய கிரிக்கெட் வீரர் எம். எஸ் தோனி ரசிகர்கள் பட்டாளம் இந்தியா முழுவதும் பரவலாக இருப்பது அனைவரும் அறிந்ததுதான்.

இதன் காரணமாகத்தான் ஐபிஎல் போட்டிகளில் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பின்னர் வருகை தந்தும், அந்த அணியின் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் குறையாமல் உள்ளது. இதற்கு முழுக் காரணமாக இருப்பது மகேந்திர சிங் தோனி என்றால் அது மிகையாது. 

இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டிலிருந்து நீள மூடியுடன், வித்தியாசமான உடல் மொழியுடன் களமிறங்கிய அந்த வீரர்தான் இன்று இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற உச்சத்தை அடைந்தார்.

ஒரு கட்டத்தில் மூத்த வீரர்கள் அணியில் இருக்கும்போது எத்தகைய விமர்சனங்களை எதிர் கொள்வார்களோ... அதைத்தான் தோனியும் சமீபகாலங்களில் எதிர்க் கொண்டார்.

ஆனால் தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு எப்போதுமே பதில் ஏதும் அளிப்பதில்லை.அதேநேரம், தன்னை விமர்சிப்பவர்களுக்கு தனது ஆட்டங்களில் மூலமாகவே பதிலளித்து அவர்களிடமே கீரிடத்தை சூட்டிக் கொள்வார். இதற்கு உதாரணமாய்  அவரது தற்போதைய ஐபிஎல் ஆட்டங்களைச் சொல்லலாம். 

தனது ஆட்டத்தின் மூலம் மட்டுமல்லாது தனித்துவமான தலைமைத்துவம், எளிமை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் ’தல’யாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார் தோனி. சமீபத்தில் கூட, தொழிலாளர்கள் தினமான ’ மே’  தினத்தில் அன்றைய நாளில் மைதானப் பராமரிப்பில் ஈடுபடும் ஊழியர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட தோனி, அவர்களுடனேயே சில மணிநேரங்களைச் செலவிட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close