[X] Close

கிரிக்கெட் ஆடத்தான் அவர்கள் விரும்புகின்றனர்... அரசியல் செய்ய அல்ல: வார்னர், ஸ்மித் ரிடர்ன் எதிர்ப்பு மீது கோச் லாங்கர் காட்டம்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 17:34 pm
  • அ+ அ-

ஸ்மித், வார்னர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் ஆடும்போது இங்கிலாந்து ஆதரவு தீவிர ரசிகர் படை ‘பார்மி ஆர்மி’ சாண்ட் பேப்பர் என்று இருவரையும் கிண்டல் செய்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என்று ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

 

மேலும் அவர்கள் அணிக்கு மீண்டும் திரும்புவதை ஆஸ்திரேலிய அணி வீரர்களே எதிர்க்கிறார்கள் என்ற செய்தியை மறுத்த ஜஸ்டின் லாங்கர், ‘அவர்கள் கிரிக்கெட் ஆட வருகின்றனர், அரசியல் செய்ய அல்ல என்று காட்டமாகத் தெரிவித்தார்.

 

இது குறித்து ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற ஆஸி. விளையாட்டுப் பிரதான ஊடகத்திற்கு ஜஸ்டின் லாங்கர் அளித்த பேட்டி வருமாறு:

 

பார்மி ஆர்மி நிச்சயம் கலாய்ப்பார்கள் என்பது தெரியும். அதனை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் நாங்கள் நல்ல தயாரிப்பில்தன இருக்கிறோம். எங்களிடம் உத்திகள் உள்ளன.

 

அதே போல் ‘அக்கறையற்ற கிசுகிசுக்கள்’ என்று நான் கூறியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். வார்னர், ஸ்மித் வந்தால் வீரர்கள் உலகக்கோப்பையில் பங்கேற்காமல் புறக்கணிப்பார்கள் என்று கூறுவது எள்ளலுக்குரியது.

 

இது என்னை எவ்வளவு எரிச்சல் படுத்தியது என்று உங்களால் நம்ப முடியாது.

 

வார்னர், ஸ்மித் அணிக்குள் திரும்புவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை, இரு சகோதரர்கள் குடும்பத்துடன் இணைகிறார்கள் என்பதே ஆஸி. அணியினரின் உணர்வாக உள்ளது.

 

அவர்கள் விரும்புவது எல்லாம் கிரிக்கெட் ஆடுவதையே, அரசியல் செய்வதையல்ல. அவர்கள் இப்போது நல்ல கிரிக்கெட்டை ஆடி வருகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்து வருகின்றனர்.

 

அவர்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டிருப்பார்கள், நாமும் சில நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்போம். இப்போது இந்தப் பாடங்களை அவர்கள் வாழ்க்கையில் செயல்படுத்தவிருக்கிறார்கள்.

 

இவ்வாறு கூறினார் ஜஸ்டின் லாங்கர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close