[X] Close

‘இதற்கு முன்னால் பள்ளி கிரிக்கெட்டில்தான் தொடக்கத்தில் இறங்கியிருக்கிறேன்’


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 14:52 pm
  • அ+ அ-

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று 8 ரன்களுக்கு 7 விக்கெடுட்டுகளை சரியவிட்டுத் தோல்வியடைந்தது பள்ளி கிரிக்கெட் தரத்துக்கு இருக்கிறதா என்று நம் கேட்டால் பள்ளி கிரிக்கெட் ஆடுபவர்கள் நம்முடன் சண்டைக்கு வந்து விடுவார்கள்.

 

அது சரிவா, அல்லது உஷ் கண்டுக்காதீங்கவா என்பது போகப்போகத்தான் தெரியும்.  பவுலிங்கில் ஹாட்ரிக் ஐபிஎல் சாதனை புரிந்த  இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பேட்டிங்கில் தொடக்கத்தில் இறங்கி 10 பந்துகளில் 20 ரன்கள் என்று அதிரடித் தொடக்கம் கொடுத்தார்.

 

இந்நிலையில் அவர் இதற்கு முன்பாக பள்ளிக்கு ஆடும் போதுதான் தொடக்க வீரராகக் களமிறங்கினேன் என்று கூறியதை ஐபிஎல் கிரிக்கெட் பற்றிய அவரது மதிப்பீடாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாம் கரனுக்கு தான் ஹாட்ரிக் எடுத்ததே தெரியவில்லை.

 

“நான் ஹாட்ரிக் எடுத்ததே எனக்குத் தெரியவில்லை.  ரசிகர்கள் சப்தம் போட்டதால் எனக்கு என் சிந்தனையே கூட காதில் விழவில்லை. அஸ்வின் என்ன சொன்னாரோ அதைச் செய்தேன்.  உள்ளூர் பேட்ஸ்மென்கள் எப்படி ஆடுவார்கள், எங்கு அடிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மற்றவர்களிடம்தான் கேட்டறிந்தேன். ஆனால் ஷமி இரண்டு அபாரமான ஓவர்களை வீசினார். அஸ்வினின் அந்த ரன் அவுட்.  தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்று கருதுகிறேன்.

 

நான் இங்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக 150 ரன்களுக்கும் மேல் எடுத்து விட்டோம்.  நான் இதற்கு முன்பாக ஸ்கூல் கிரிக்கெட்டில்தான் இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறேன், மூத்தோர் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறை” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close