[X] Close

பேச்சற்றுப் போனேன்: 8 ரன்களுக்கு 7 விக்கெட் சரிவைப் பார்த்த ஷ்ரேயஸ் அய்யர் அதிர்ச்சி


8-7

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 14:28 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

மொஹாலியில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை கிங்ஸ் லெவன் அணி நேற்று பரபரப்பான முறையில் வெற்றி பெற்றது.

 

167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. ரிஷப் பந்த். கொலின் இங்க்ரம் இணைந்து டெல்லி அணியை வெற்றி நிலைக்கு முன்னேற்றுவதற்கு கடினமாக ஆடினர்.

 

21 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளன, மிகவும் எளிதான ஒரு வெற்றிச்சூழல் இதிலிருந்து தோற்க வேண்டுமென்றால் அதற்கு தனிச்சிறப்பான ஒரு ‘திறமை’ வேண்டும் என்பதை கிங்ஸ் லெவன் அல்ல டெல்லியே காட்டியது.  சாம் கரன் 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஹாட்ரிக் அடக்கம்.

 

இந்த திடுக்கிடும் தோல்வி குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் தலைவர் ஷ்ரேயஸ் அய்யர் கூறும்போது, “என்னால் நம்ப முடியவில்லை, உண்மையில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, பந்துக்கு ஒரு ரன் ஸ்டேஜிலிருந்து தோற்பது நிச்சயம் ஏமாற்றமே.

 

சாதுரியமான கிரிக்கெட்டை நாங்கள் வெளிப்படுத்தவில்லை, அவர்கள் எங்களை அனைத்து புலங்களிலும் தோற்கடித்தனர்.  அந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் அமைதியுடனும் நிதானத்துடனும் இருந்தனர்.  இப்போது நான் பேச்சற்று போயுள்ளேன், காரணம் இது ஒரு முக்கியமான மேட்ச் ஆகும்.

 

இத்தகைய வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைவது நிச்சயம் தொடரின் இறுதி தருணங்களில் எங்களுக்கு உதவப்போவதில்லை.  வெளியிலிருந்து விக்கெட்டுகளை அப்படித் தொடர்ச்சியாக இழப்பது வெளியிலிருந்து பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது. பேட்ஸ்மென் ஒருவர் கூட மேட்சை வெற்றியுடம் முடிக்கும் முயற்சி கூட எடுக்கவில்லை. ஏதோ தொடரின் ஆரம்பத்தில் இது ஏற்பட்டது, இதனால் சரி செய்து கொள்ள முடியும் அந்தவகையில் இது நல்லதே.

 

இத்தகைய சூழ்நிலையில் போட்டிகளை எப்படி பினிஷ் செய்வது என்பது பற்றி மனரீதியாக இன்னும் கொஞ்சம் நாங்கள் கடினமாக வேண்டும்” இவ்வாறு கூறினார் ஷ்ரேயஸ் அய்யர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close