[X] Close

பணம் கொடுத்து நேரில் வந்து போட்டியை ரசிப்பவர்கள் எந்த அணியை ஆதரித்தாலும் ஓகேதான்: தோனி கருத்து


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 17:58 pm
  • அ+ அ-

மோசமான தொடக்கமாக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் வீரர்கள் அமைதியுடனேயே இருந்தனர் என்று கூறும் தோனி, சென்னை ரசிகர்கள் பற்றி மறக்காமல் ஒவ்வொரு முறையும் குறிப்பிடுவார்.

 

நேற்று 27/3 என்ற நிலையிலிருந்து தோனி தன் அபாரமான 75 ரன்களால் சிஎஸ்கே ஸ்கோரை 175/5 என்று உயர்த்தி வெற்றிக்கான ஸ்கோராக மாற்றி பிறகு 167/8 என்று ராஜஸ்தான் அணியை சிஎஸ்கே வீழ்த்தியதில் அவரது கேப்டன்சியும் பங்கு வகித்தது.

 

இந்நிலையில் தோனி கூறியதாவது:

 

பார்ட்னர்ஷிப் வேண்டும் என்று விரும்பினோம், அது தேவைப்பட்டது.  பனிப்பொழிவு சிறிதளவு இருந்தது,  ஆட்டம் போகப்போக பிட்ச் எளிதாகும் என்றே நினைத்தோம், கடைசியில் அடித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டோம்.

 

அணியில் சாண்ட்னரை கொண்டு வந்ததற்குக் காரணம் ராஜஸ்தானில் இடது கை வீரர்கள் இல்லை என்பதே, வலது கை வீரர்கள் அதிகம் இருந்ததால் ஹர்பஜன் சிங்குக்குப் பதில் சாண்ட்னரைக் கொண்டு வந்தோம்.  தேவையில்லாமல் மாற்றங்கள் செய்ய மாட்டோம்.

 

தொடர் போகப்போக ஒவ்வொருவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். பவுலர்களும் பார்முக்கு வந்து விடுவார்கள்.  வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி வீசுகிறார்கள் என்பதை தொடக்கத்தில் பார்க்க முடிவு செய்தோ, ஜடேஜா, சாண்ட்னர் பந்தைப் பற்றுவதில் சிறிது சிரமம் கண்டனர். முடிவுகள் எப்படியோ, பவுண்டரிகளை தடுக்க வேண்டும்.  வேகப்பந்து வீச்சாளர்கள் இதனை துல்லியமாக செயல்படுத்துவது கடினம்.

 

எப்போதுமே உள்ளூர் அணிக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் தரப்பில் இருக்கும், இங்குதான் ஸ்பிரிட் ஆஃப் த கேம் வருகிறது, ரசிகர்கள் எப்பவும் உள்ளூர் அணிப்பக்கமே இருப்பார்கள்.

 

இதுதான் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்குகிறது. பணம் கொடுத்து போட்டியை நேரில் காண வர வேண்டும் என்று நினைத்து மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் எந்த அணியை ஆதரித்தாலும் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. என்றார் தோனி

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close