[X] Close

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் சாய்னா நெவால் கருத்து


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:17 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

கடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளை விட வரும் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:2008, 2012, 2016-ம் ஆண்டுநடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை விட இந்த முறை டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கு அதிக சவாலாக இருக்கும்.

சீன வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சவால் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டு வீராங்கனைகளும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

எனவே டோக்கியோ ஒலிம்பிக், எங்களுக்கு சோதனைக்களமாக இருக்கும்.

ஆனால் நான் இப்போது ஒலிம்பிக் போட்டி பற்றியோ, அதில் பங்கேற்கத் தகுதி பெறுவது குறித்தோ நினைக்கவில்லை. அடுத்த நடைபெறவுள்ள போட்டிகளுக்காக நான் தயாராகி வருகிறேன். நான் என்னுடைய விளையாடும் திறனை மேம்படுத்தி வருகிறேன். அடுத்து வரும் போட்டிகளில் காயம் இல்லாமலும், முழு தகுதியுடனும் இருக்கவும் முயற்சி செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாய்னா நெவால் இதுவரை 2008, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். 2008-ல் கால் இறுதி வரைமுன்னேறிய அவர், 2012 ஒலிம்பிக் போட்டில் வெண்கலம் வென்றார். ஆனால் 2016-ல் அவர் முழங்கால் காயம் காரணமாக தகுதிச் சுற்றுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close