[X] Close

என்னத்த சொல்றது? - தோல்விக்குப் பிறகு விராட் கோலி விரக்தி


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 21:17 pm
  • அ+ அ-

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 11வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி ஆர்சிபி அணிக்கு ஆணியறைந்தது. 231/2 என்று களத்தில் ஆர்சிபியை ஓட விட்டு பிறகு அந்த அணியை 113 ரன்களில் சுருட்டி பெவிலியனுக்கு அனுப்பியது சன் ரைசர்ஸ்.

 

இது ஒரு மிகப்பெரிய தோல்வியாகும் ஆர்சிபி அணிக்கு, டாஸ் வென்று பேட்டிங் பிட்சில் முதலில் பேட் செய்வதை விடுத்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து கடும் வெயிலில் பவுலர்களை வாட்டினால் என்ன நடக்கும்? வார்னர், பேர்ஸ்டோ பிழிந்து எடுத்தனர். இருவரும் சதம். அதிரடி, இதனால் மைதானம் நெடுக ஆர்சிபி வீரர்கள் அங்குமிங்கும் ஓடுவதைத்தான் பார்க்க முடிந்தது.

 

படுதோல்விக்குப் பிறகு விராட் கோலி கூறியதாவது:

 

இதுதான் எங்கள் அணியின் படுமோசமான தோல்வியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  என்னவென்று சொல்வது, விளக்குவது கடினம். ஒவ்வொரு துறையிலும் சன் ரைசர்ஸ் என்ற தரமான அணி எங்களை வீழ்த்தி விட்டது.  முன்னாள் சாம்பியன்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.

 

பேர்ஸ்டோ, வார்னர் பேட் செய்த போது பலதரப்பட்டதையும் நாங்கள் சோதித்திருக்கலாம், குறிப்பாக பவுன்சர்கள் வீசியிருக்கலாம்.  பிட்சை புரிந்து கொண்ட பின் அவர்கள் பிரமாதமாக ஆடினர்.

 

சில எட்ஜ்கள் ஆளில்லா இடத்தில் விழுந்தன.  முதல் 16-17 ஓவர்கள் வரை தீவிரம் காட்டியது அவர்கள் தரப்பில் பிரில்லியண்ட்.  தொடக்க ஓவர்களில் நாங்கள் ரன் குவிக்கலாம் என்று நினைத்தோம், ஆனால்  நான் 3 ரன்களில் ஆட்டமிழந்தேன், நானும் ஏ.பி.யும் சேர்ந்து பேட் செய்திருந்தால் சமநிலையாக இருந்திருக்கும்.

 

இன்னும் 11 ஆட்டங்கள் உள்ளன, விஷயங்கள் விரைவில் மாறும். இதனை அடுத்தப் போட்டியில் நாங்கள் பயன்படுத்த வேண்டும். நம் வழியில் எதுவும் நடக்கவில்லை எனில் வெற்றிக்கணங்களை உருவாக்குவதற்கான வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். நன்றாகத் தொடங்க வேண்டும். அடுத்தப் போட்டி அந்தவகையான போட்டியாக எங்களுக்கு அமையும்.

 

இவ்வாறு கூறும் கோலியின் ஆர்சிபி அணி அடுத்ததாக ராஜஸ்தான் அணியைச் சந்திக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close