[X] Close

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் : ஐபிஎல் நிர்வாகம் அதிரடி


12

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 14:05 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்காக, ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதிக்கப்பட்டது.

மொஹாலியில் நேற்று நடந்த  ஐபிஎல் டி20 போட்டியில் 9-வது லீக் ஆட்டத்தில் அஸ்வினின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்களை துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்த போட்டி மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு 7.30 மணிக்கு முடிந்தவிட வேண்டும். ஆனால், பந்துவீசுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக்கொண்டனர். இதனால், போட்டி கூடுதலாக 30 நிமிடங்கள் நீடித்தது.

இதையடுத்து, ஐபிஎல் விதிமுறையான நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசத் தவறிய  ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.  இந்த சீசனில் முதல் முறையாக ஐபிஎல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மும்பை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close