[X] Close
 

மும்பைக்கு எதிரான முக்கிய வெற்றி மனைவி அனுஷ்காவுக்கு பிறந்தநாள் பரிசு: விராட் கோலி 


kohli-dedicates-win-to-anushka

ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கோலி - அனுஷ்கா

  • kamadenu
  • Posted: 02 May, 2018 13:04 pm
  • அ+ அ-

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியை தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாள் பரிசு என்று அறிவித்துள்ளார் பெங்களூரு அணித் தலைவர் விராட் கோலி. அனுஷ்கா சர்மா செவ்வாய்க்கிழமை தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

மும்பை இந்தியன்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி, "இந்த வெற்றி எங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்பட்டது. தொடரின் முக்கியமான கட்டத்தில் இந்த வெற்றியும் முக்கியமானதாகிறது. இந்த இரண்டு புள்ளிகள் எங்களுக்கு இன்றிரவு தேவையாயிருந்தது. இந்த உந்துதலும் எங்களுக்கு தேவையாயிருந்தது.

இந்த வெற்றி கொடுக்கும் நம்பிக்கையை அடுத்த போட்டிகளில் எடுத்துச் செல்ல வேண்டும். என் மனைவி இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள். இந்த வெற்றி அவருக்கான சிறிய பரிசு. அவர் முன் இந்த இரண்டு புள்ளிகளைப் பெற்றது மிக முக்கியமானது" என்று கோலி கூறினார். 

- பிடிஐ



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close