[X] Close

சிஎஸ்கே அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 16:04 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்

இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் டேவிட் வில்லே. இங்கிலாந்தின் யார்க் ஷயர் கவுண்டி அணியில் டேவிட் வில்லே தற்போது விளையாடி வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்ட டேட் வில்லே, கடந்த 2018-ம் ஆண்டி சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே அணி விளையாடியுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகிக்கொள்வதாக டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.

யார்க் ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப் இணையதளத்தில் டேவிட் வில்லே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

David-Willey.jpg 

என்னுடைய தனிப்பட்ட காரணங்களால், என்னால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் பங்கேற்க இயலாது. என் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது, மனைவியும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

என்னால் இந்த ஆண்டு யார்க் ஷயர் அணியில் மட்டுமே பங்கேற்று விளையாட முடியும். மற்ற லீக் ஆட்டங்களிலும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம் பெற முடியாது என்பதை தெரிவிக்கிறேன்.

எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகுந்த ஆதரவு அளித்து, என்னை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இது நிச்சயம் எளிதான முடிவு அல்ல, ஆனால், இந்த நேரத்தில் சரியான முடிவு. என்னுடைய குடும்பத்தை நான் கவனிப்பதுதான் முதலில் முக்கியம், கிரிக்கெட் போட்டி 2-வது பட்சம்தான். எனக்கிருக்கும் சிக்கல் முடிந்தபின், நான் கிரிக்கெட்டில் மீண்டும் கவனம் செலுத்துவேன் " எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சீசனில் கேதார் ஜாதவுக்கு பதிலாக டேவிட் வில்லி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகத்திடம் கேட்டபோது, தங்களுக்கு இன்னும் முறைப்படி, டேவிட் வில்லேவிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்று எந்தவிதமான அறிவிப்பும் எங்களுக்கு கூறவில்லை " எனத் தெரிவித்தனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close