[X] Close

மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தல்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:24 am
  • அ+ அ-

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றனர்.

12-வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடர் சீன தைபேவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் இறுதி சுற்றில் 239 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹாங் காங்கின் ஷிங் ஹோ சிங் 237.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வஃபா அலாலி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, ரவிந்தர் ஆகிய 3 பேரும் தகுதி பெற்றனர். இறுதி சுற்றில் 0.2 புள்ளிகள் வித்தியாசத்தில் அபிஷேக் வர்மா, கொரியாவின் மோஸ் கிமிடம் தங்கப் பதக்கத்தை இழந்தார். 240.7 புள்ளிகள் சேர்த்த அபிஷேக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேவேளையில் சவுரப் சவுத்ரி 198.8 புள்ளிகள் குவித்த நிலையில் சூட்-ஆஃப் முறையில் வெண்கலப் பதக்கத்தை கொரியாவின் தயிஹ்வான் லீயிடம் பறிகொடுத்தார். ரவிந்தர் 136.3 புள்ளிகள் சேர்த்து 7-வது இடமே பிடித்தார். அதேவேளையில் சவுரப் சவுத்ரி உள்ளிட்ட 3 பேரை உள்ளடக்கிய இந்திய அணி அணிகள் பிரிவில்1742 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. - பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close