[X] Close

கிருத்திகை நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:57 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தன. ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் மன்கட் அவுட் முறையில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே தோல்விப் பாதையிலிருந்து அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பும் முயற்சியில் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே இறங்கக்கூடும்.

அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 69 ரன்கள் சேர்த்தஜாஸ் பட்லரிடமிருந்து மேலும்ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பட்லருடன் ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்துபவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சில் தவல் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம், பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளையில் வெறும் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த ஜோப்ரா ஆர்ச்சரிடமிருந்து மேலும் ஒரு அபாரமான பந்துவீச்சு வெளிப்படக்கூடும்.

ராஜஸ்தானைப் போலவே, முதல் போட்டியில் தோல்வி கண்டநிலையில் ஹைதராபாத் அணி களம் காண்கிறது. அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர்முதல் ஆட்டத்தில் அபாரமாகவிளையாடினார். இந்தப் போட்டியிலும் அவர் எதிரணி பந்துவீச்சை பதம் பார்க்கக்கூடும். வில்லியம்ஸன் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது நேற்றுமாலை உறுதி செய்யப்பட வில்லை.

இதனால் புவனேஷ்வர் குமாரே அணியை மீண்டும் வழிநடத்தக்கூடும். பேட்டிங்கில் ஜானி பேர்ஸ்டோ, விஜய் சங்கர் ஆகியோரும் கடந்த ஆட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ஹைதராபாத் அணி ரஷித் கான், புவனேஸ்வர்குமார் ஆகியோரையே பெரிதும் நம்பியுள்ளது.

ஆனால் கடந்த ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவரில் புவனேஷ்வர் குமாரின் பந்து விச்சு எடுபடாமல் போனது. மேலும் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால் புவனேஷ்வர் குமார் தனது பந்து வீச்சை மேலும் பட்டை தீட்டுவதில் முனைப்பு காட்டக்கூடும். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close