[X] Close

ஆர்சிபியின் பும்ரா: எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் மகேஷ் குமார்


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 18:36 pm
  • அ+ அ-

கடந்த செவ்வாயன்று இந்திய வேகப்பந்து வீச்சாளரான மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா வலையில் பந்து வீசவில்லை, ஆனால் அவருக்குப் பதிலாக அவரைப்போலவே வீசி எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளார் ஆர்சிபி அணியின் ‘அடுத்த பும்ரா’ என்று அழைக்கப்படும் மகேஷ் குமார்.

 

பும்ரா போலவே முதலில் சிறு வேக நடை, பிறகு ஒரு தத்துத் தத்தி ஓடி வந்து கையை மடக்காமல் வீசும் முறை மகேஷ் குமாருக்கு அடுத்த பும்ரா என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.  மகேஷ் குமார் முதன் முதலில் 2017-ல் இந்திய அணியின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். “இந்திய அணி என் பந்து வீச்சை வரவேற்றது, அதுமுதல் இந்திய வீரர்களுக்கு நான் வீசி வருகிறேன்” என்றார் மகேஷ் குமார்.

 

22 வயது மகேஷ் குமாரை ஆஷிஷ் நெஹ்ரா ஆர்சிபி வலையில் வீசுமாறு அழைத்தார்.  மகேஷ் குமார் கூறும்போது,  “கோலியிடம் பேசியது சிறப்பு வாய்ந்தது. அவர் என்னுடைய பலத்தில் வீசுமாறு அறிவுரை வழங்கினார், யாரையும் காப்பி செய்ய வேண்டாம்” என்றார்.

 

பயிற்சி கட்டம் முடிந்தவுடன் ஆஷிஷ் நெஹ்ரா, பொறியியல் பட்டதாரியான அடுத்த பும்ரா மகேஷ் குமாருக்கு ஒரு ஜதை ஷூக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close