[X] Close

ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே


6

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:19 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக் கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலை மையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங் களூரு அணி, ரோஹித் சர்மா தலை மையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பிய னான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்திருந்தது. அதேவேளையில் 3 முறை சாம்பிய னான மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. இதனால் இரு அணிகளும் தொடரில் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

இன்றைய ஆட்டமானது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலிக்கும், உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்குமான நேரடி மோதலாகவே பார்க்கப்படுகிறது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசிய பும்ரா, பந்தை தடுக்க முயன்ற போது கீழே விழுந்து இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார்.

இதனால் உடற்பயிற்சி நிபுணரின் உதவியுடன் களத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவர், அதன் பின்னர் பேட்டிங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களமிறக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக்குழு சார்பில் பும்ராவுக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.

இதில் அச்சம் கொள்ளும் வகையில் காயம் ஏதும் இல்லை என்பது தெரியவந்த பின்னரே மும்பை அணி நிர்வாகமும், பிசிசிஐ-யும் பெருமூச்சு விட்டன. இதற்கிடையே நேற்றுமுன்தினம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 20 நிமிடங்கள் அடிப்படை பயிற்சிகளை மேற்கொண்டார் பும்ரா. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவர், முழு உடல் தகுதியை எட்டக்கூடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் பும்ரா தனது சமூக வலை தளத்தில் ‘கர்ஜிக்க தயார்’ என தெரி வித்துள்ளார். இது அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதை உறுதி செய்வதாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் மூத்த வேகப் பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா, மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.

முதலில் மலிங்கா 6 ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியானது. ஏனெனில் இலங்கை யில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சூப்பர் மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் அந்நாட்டு வீரர் கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் பிசிசிஐ கொடுத்த அழுத் தம் காரணமாக மலிங்காவை, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 வயதான யுவராஜ் சிங் 35 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறிய ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பென் கட்டிங் ஆகியோர் மீண்டும் பார் முக்கு திரும்புவதில் கவனம் செலுத் தக்கூடும்.

அதிரடியாக விளையாடும் குயிண் டன் டி காக், கெய்ரோன் பொலார்டு, கிருணல் பாண்டியா ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடுவதில் முனைப்பு காட்ட வேண்டிய நிலை யில் உள்ளனர்.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 70 ரன்களுக்கு சுருண்டிருந்தது. இதனால் விராட் கோலி, டி வில்லியர்ஸ், சிம்ரன் ஹெட் மையர் ஆகியோர் பேட்டிங்கில் ஒருங்கிணைந்த உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close