[X] Close

'அப்பா போங்க'- தோனியை உற்சாகப்படுத்திய மகள் ஸிவா; வைரலாகும் வீடியோ


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 12:32 pm
  • அ+ அ-

மகள் என்றாலே அப்பாக்களுக்கு ஸ்பெஷல்தான். அதிலும் பணியிடத்துக்கே வந்து இன்னும் சிறப்பாக வேலைபாருங்கள் என்று உற்சாகப்படுத்தும் மகள் இருந்தால் எப்படி இருக்கும்? அதை நிஜமாக்கி இருக்கிறார் தோனியின் மகள் ஸிவா.

ஸிவா தோனி குறித்து அறிமுகம் எதுவும் தேவையில்லை. ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் அவரின் நேற்றைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த 12-வது ஐபிஎல் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தோனியின் ஆட்டத்தைக் காண அவரின் மனைவி சாக்‌ஷியும் மகள் ஸிவாவும் வந்திருந்தனர். தொடக்கம் முதலாகவே அப்பாவை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் ஸிவா.

'கோ பப்பா!' (அப்பா வேகமாகச் செல்லுங்கள்) என்று ஆரவாரமாகக் கூச்சலிட்டவாறே தோனியை உற்சாகப்படுத்தினார் ஸிவா. இதுதொடர்பான வீடியோவை ஐபிஎல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் தனது தந்தையை உற்சாகப்படுத்திய ஸிவாவின் வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான வீடியோவைக் காண

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close