[X] Close

ஹாக்கியில் இந்தியா வெற்றி


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 08:11 am
  • அ+ அ-

சுல்தான் அஸ்லான் ஷா கோப் பைக்கான ஹாக்கித் தொடரில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத் தில் இந்தியஅணி 4-2 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.

மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் கொரியா அணியை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இந்நிலையில் 3-வது ஆட்டத்தில் நேற்று போட்டியை நடத்தும் மலேசியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடியது.

இதில் ஆட்டத்தின் 17-வது நிமிடத் தில் சுமித் கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 4-வது நிமிடத்தில் மலேசியா பதிலடி கொடுத்தது. அந்த அணயின் வீரர் ரஸி ரகிம் பெனால்டி கார்னர் மூலம் அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையானது. 27-வது நிமிடத்தில் இந்தியாவின் சுமித் குமார் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என முன்னிலை பெற்றது.

36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை வருண் குமார் கோலாக மாற்ற இந்திய அணியின் முன்னிலை 3-1 என அதிகரித்தது. 57-வதுநிமிடத்தில் மலேசிய வீரர் தஜூதின் பீல்டு கோல் அடிக்க ஆட்டம் பரபரப்பானது. ஆனால் அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் மன்தீப் சிங் பீல்டு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 7 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக் கிறது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close